கல்வி ஞானம் பெற வழிகாட்டும் கிழக்கு,வடக்கு திசைகள்
நம்மிடம் உள்ள செல்வங்களில் முதன்மையான செல்வம் கல்விச் செல்வமே. அதாவது படிப்பு என்பது எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை . ஒரு சிலர் பள்ளிப் படிப்புடன் நிறுத்தி விடுகிறார்கள். ஒருசிலர் மட்டுமே கல்லூரிப் படிப்பை படிக்க முடிகிறது. மற்றொரு சிலரே ஆராய்ச்சி படிப்புகள் படிக்க முடிகிறது. ஏன் எல்லோராலும் பட்டப் படிப்புகளையோ , ஆராய்ச்சி படிப்புகளையோ தொடர முடியவில்லை என்று என்னிடம் கேட்டால் அதற்கு வாஸ்து படியான வீடே காரணம் என்று நான் கூறுவேன்.
நன்மையும் தீமையும்
ஒரு சில நல்ல அமைப்புகள் உள்ள வீட்டில் வசிப்பவர்களின் குழந்தை, மட்டுமே மாநிலத்தில் முதல் இடம், இரண்டாம் இடங்களைப் பிடித்து நல்ல மதிப்பெண்களை வாங்குகிறார்கள். ஒருசில தவறுகள் உள்ள வீட்டில் வசிப்பவரின் குழந்தைகள் பள்ளி படிப்பைக் கூட தொடர முடியாத நிலைமை உள்ளதையும் நான் என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
வாஸ்துபடி படிப்பு
மேலும், தற்சமயம் உங்களது வீட்டில் படிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் உட்கார்ந்து படிக்க வேண்டிய திசைகள் கிழக்கு மற்றும் வடக்கு ஆகும். அத்திசைகளை நோக்கி அமர்ந்து படித்தால் படிப்பு நன்றாக வரும். அதிகாலையில் படிப்பது ஞாபக சக்தியை அதிகரிக்கும். உங்களது வீட்டில் வடகிழக்கு அறை இருந்தால் அந்த அறையை படிப்பதற்கு என்றே உங்களுடைய குழந்தைகளுக்குக் கொடுங்கள், படிப்பு மிகச் சிறப்பாக வரும்.
வெற்றிக்கு வழி
படிப்பதற்கு என்றே சில மந்திரங்கள் உண்டு. படிக்கும் அறைக்கு சில நிறங்கள் உண்டு படிக்கும் குழந்தைகளுக்கு சில உணவுப் பழக்கங்கள் உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க சில பல உடற்பயிற்சிகளும் உண்டு. இவைகள் அனைத்தும் எல்லோரும் அறிந்ததே. இவைகளைக் கடைபிடிப்பவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள், மற்றவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள். 82205-44911