சித்திரை நட்சத்திர குணாதிசியங்கள் !!
சித்திரை :
சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம்
சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்
சித்திரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி – கன்னி : புதன்
சித்திரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி – துலாம் : சுக்கிரன்
பொதுவான குணங்கள் :
- சிறந்த குணம் உடையவர்கள்.
- தான, தர்ம எண்ணம் உடையவர்கள்.
- எல்லோருக்கும் நண்பர்கள்.
- வாக்கு வல்லமை உடையவர்கள்.
- குறைந்த நித்திரை உடையவர்கள்.
- சேமிப்பதில் வல்லவர்கள்.
- எதிலும் நிதானமானவர்கள்.
- கோபம் உடையவர்கள்.
- தான் எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவர்கள்.
- வெளியூர் பயணங்களில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள்.
- கல்வி கேள்வியில் நாட்டம் உடையவர்கள்.
- தற்புகழ்ச்சியில் விருப்பம் உடையவர்கள்.
- ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
- தைரியம் உடையவர்கள்.
- பரந்த உள்ளம் கொண்டவர்கள்.
- பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வார்கள்.
சித்திரை முதல் பாதம் :
இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- சிறந்த ஞானம் உடையவர்கள்.
- திறமை உடையவர்கள்.
- கடமையுணர்வு கொண்டவர்கள்.
- கடும் உழைப்பு உடையவர்கள்.
- துணிச்சல் குறைவானவர்கள்.
- மற்றவர்கள் சார்ந்து இருந்தால் இவர்கள் வெற்றியாளர்கள்.
சித்திரை இரண்டாம் பாதம் :
இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- தெய்வபக்தி உடையவர்கள்.
- நல்லவர்கள்.
- அறவழியில் நடப்பவர்கள்.
- தன்னம்பிக்கை குறைவானவர்கள்.
- தெளிவற்ற சிந்தனை உடையவர்கள்.
- இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும்.
சித்திரை மூன்றாம் பாதம் :
இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- நல்ல நடத்தையுடையவர்கள்.
- நல்ல அறிவு உடையவர்கள்.
- உதவும் குணம் உடையவர்கள்.
- நல்லதையே செய்ய நாட்டம் உடையவர்கள்.
- குடும்பத்தை பேணி காப்பவர்கள்.
சித்திரை நான்காம் பாதம் :
இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- பகைவரை நேசிப்பவர்கள்.
- சுயபுத்தி உடையவர்கள்.
- வீரம் நிறைந்தவர்கள்.
- சிறந்த பேச்சாளர்கள்.
- வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியுடையவயர்கள்.
- தலைமை பதவி வகிக்கும் குணம் உடையவர்கள்.