உடல் எடையை குறைக்க வேண்டுமா?
உடல் எடையை குறைக்க உதவும் மூலிகைச் சாறு
தேவையான பொருள்கள்:
சீரகத் தூள் அரை ஸ்பூன்
சுக்கு 10 கிராம்
மிளகு ஒன்று
துவரம் பருப்பு ஒரு கப்
இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கொத்துமல்லி தேவையான அளவு
திப்பிலி தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை நன்கு கூழாக வேக விடவும்.
நன்கு வெந்த துவரம் பருப்புடன் சுக்குப் பொடி, மிளகுப் பொடி, திப்பிலிப் பொடி, இஞ்சிப்- பூண்டு விழுது, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இப்படியாக மேற்கண்ட அனைத்திலும் பச்சை வாசனை நன்கு போகும் வரையில் கொதிக்க விட்டு இறக்கவும்.
பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, தேவையான அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை தூவி சாப்பிடவும். இதோ இப்போது சுவையான மூலிகைச் சாறு தயார்.
வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சம நிலை பெற உதவும். இதனால் உடலில் உள்ள நோய் தாக்கங்கள் குறையும்.