பக்கத்து வீட்டு அமைப்பினால் நமக்கு பாதிப்பு ஏற்படுமா?
இன்றைய காலத்தில் ஒருவருக்கு நல்ல வீடு அமைவது என்பது குதிரைக் கொம்பான விஷயம், ஒருவர் நல்ல வீடு கட்டியும் ஏன் கஷ்டப்படுகிறாரே என்று அவர்கள் வீட்டுக்கு சென்று ஆராய்ச்சி செய்யும் போது தான் தெரிகிறது. பக்கத்து வீட்டு அமைப்பின் பல விஷயங்கள் இவர்களை பாதித்து கொண்டிருக்கிறது என்று,
வடகிழக்குப் பகுதியில் பக்கத்து வீட்டு தவறான அமைப்பினால் வரக் கூடிய பாதிப்புகள்
எண்ணம் ,சொல் ,செயல், சிந்தனை, எதையும் நேரடியாக சிந்திக்க முடியாத நிலை, கோமா நிலை, மயக்கநிலை, தாழ்வுமனப்பான்மை, தந்தை மகன் உறவில் விரிசல், சரியான வயதில் திருமணம் ஆகாத நிலை, நல்ல வருமானம் இல்லாத நிலை, தற்கொலை எண்ணம், சுயகௌரவம் இவைகள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தென்கிழக்குப் பகுதியில் பக்கத்து வீட்டு அமைப்பில் வரக்கூடிய தவறான அமைப்பினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள், அந்த வீட்டில் உள்ள அனைவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை செலவிற்காக தன்னுடைய உழைப்பில் 20 சதவீத பணத்தை இழக்கிறார்கள், போலீஸ் கேஸ், கோர்ட்டுக்கு கேஸ், திருட்டு, தீ விபத்து, திடீர் மரணங்களை சந்திப்பது, திருமணம் தடை, கல்வியில் தடை இதுபோல பல பிரச்சனைகள் வருவது.
தென்மேற்கு பகுதியில் பக்கத்து வீட்டு அமைப்பின் தவறான அமைப்பினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்
அந்த வீட்டில் எஜமான் கடுமையாக பாதிக்கப்படுதல், வருமானம் இல்லாமல் இருத்தல், சேமிப்பை இழப்பது , உரிமையை இழக்க நேரிடுவது, ஆண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவது, இருதயம் சம்பந்தமான நோய்வாய்ப்படுவது, சிறுநீரகம், கல்லீரல், கணையம் போன்ற பகுதிகளில் நோய்வாய்ப்படுவது கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுவது, ஏதோ ஒரு காரணத்திற்காக மனைவியைப் பிரிந்து வாழ்வது, நஷ்டங்களை சந்தித்து, சுயமரியாதையை இழப்பது இதுபோன்ற இன்னும் பல பிரச்சனைகள் வரக் கூடும்
வடமேற்கு பகுதியில் பக்கத்து வீட்டு அமைப்பில் தவறு வரும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகள்
இவர்கள் கடன் சுமையில் தள்ளப்படுகிறார்கள், வறுமை, மன நலம் தொடர்பான பிரச்சினைகள், கண்பார்வை தொடர்பான பிரச்சினைகள், பிரச்சினைகளை சந்திக்க முடியாமல் ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று வாழக் கூடிய நிலையில் தள்ளப்படுவது, கடன் சுமையால் ஆயுள் முழுவதும் வட்டி செலுத்துவது, குழந்தைகளை தத்து கொடுப்பது, குழந்தைகளை தத்தெடுப்பது, குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது, குழந்தைக்காக மருத்துவ செலவுகள் நிறைய செய்வது போன்ற இன்னும் பல பிரச்சனைகள் வரக்கூடும். 82205-44911