வீட்டிற்குள் எந்தெந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும்

வீட்டிற்குள் எந்தெந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும்?

 

வாஸ்து என்பது ஒரு கட்டிடத்தை கட்டியபிறகு அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு எவ்வாறு பலனை ஏற்படுத்துகிறது என்பது தான்.

 

வீட்டினுள் இருக்கக்கூடிய பொருட்களை பொருத்து ஏதாவது வாஸ்து பலன் மாறுமா என்றால்? கண்டிப்பாக எந்த ஒரு மாற்றமும் நிகழாது.

 

இயற்கையிலேயே நாம் உபயோகிக்கக்கூடிய சில பல பொருட்களை நமது முன்னோர்கள் நமக்கு இப்படித்தான் உபயோகிக்க வேண்டும் என்கிற வழிமுறையை வகுத்து சென்றுள்ளார்கள். அதை பற்றி பார்ப்போம்.

 

சமையலறையில் சமைக்கும் திசை எப்போதுமே கிழக்கு முகம் பார்த்தவாறு இருக்க வேண்டும்.

 

கழிவறையில், கழிப்பறை கோப்பை தெற்கு மற்றும் வடக்கு திசையில் மட்டுமே இருக்க வேண்டும்.

 

படுக்கை அறையில், படுக்கை எப்போதுமே கிழக்கு அல்லது மேற்காக இருக்க வேண்டும்.

 

பூஜையறையில் சாமி படங்கள் வடக்கு மற்றும் கிழக்கு முகமாக வைப்பது சிறப்பு.

 

குழந்தைகள் படிக்கும் அறை, கிழக்கு மற்றும் வடக்கு முகமாக அமர்ந்து படிக்கும்படி அமைத்துக் கொள்ளவும்.

 

பீரோக்கள் வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமைத்துக் கொள்ளவும்.

 

டைனிங் டேபிளை, கிழக்கு மற்றும் தெற்கு மற்றும் மேற்கு முகமாக அமைத்துக்கொள்ளவும்.

 

எடை அதிகமான பொருட்களை, தெற்கு மற்றும் மேற்கு சுவர் ஓரமாக வரும்படி அமைத்துக்கொள்ளவும்.

 

Locker போன்ற எடை அதிகமான பொருட்களை மொத்த வீட்டமைப்பில் தென்மேற்கில் வைத்துக்கொள்ளவும். 82205-44911