விருந்தினர் தங்கும் அறைக்கும் வாஸ்து உண்டா?
விருந்தினர்களால் விவகாரம் :
நம் முன்னோர்கள் "விருந்தும் மருந்தும் மூன்று வேளை " என்று கூறினார்கள்.
வாஸ்துவிற்கும், நாம் வாழும் வீட்டிற்கும் தொடர்பு இருப்பதைப் போல, நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களைத் தங்க வைப்பதற்கும், வாஸ்துவிற்கும் கூட தொடர்பு உண்டு. அதில் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களைத் தங்க வைக்கும் அறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களை அவர்களுக்கு உண்டான அறையில் தங்க வைத்தால் மட்டுமே விருந்தினர்கள் என்றுமே நமக்கு உறவினர்களாக இருப்பார்கள். உறவினர்களை அவர்களுக்கு உண்டான அறை தவிர்த்து வேறு அறைகளில் தங்க வைக்கும் பொழுது அவர்கள் தங்களை நமது குடும்ப நபரைப் போல நினைத்துக் கொண்டு , குடும்ப விவகாரத்தில் தலையிடுவது, நமக்கே யோசனை கூறுவது போன்ற அணுகுமுறை குடும்ப உறவுகளிலேயே பிரிவினையை ஏற்படுத்த வல்லது.
மாஸ்டர் பெட்ரூம் :
இன்று நமது சமுதாயத்தில் விருந்தினராக போனவர்கள் அந்த வீட்டின் மொத்த உரிமையையே எடுத்துக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இன்னும் சில பேர் தம் சொந்த வீட்டிலேயே விருந்தினர் போன்று வந்து செல்வதும் உண்டு . இதற்குக் காரணம் மாஸ்டர் பெட்ரூம் இருக்க வேண்டிய அறையை விருந்தினர் அறையாகப் பயன்படுத்துவதே ஆகும்.
வாஸ்துபடி விருந்தினர் அறை:
விருந்தினர் அறையை ஒருபோதும் தென்மேற்கில் அமைக்கக் கூடாது. தென்மேற்கு அறை அந்த வீட்டின் எஜமானன் பயன்படுத்துவதற்கு மட்டுமே ஆகும். வீட்டில் வரவேற்ப்பறை அமைக்க சிறந்த இடம் வடமேற்குப் பகுதி. தென்கிழக்கு மற்றும் வடகிழக்கிலும் விருந்தினர் அறை அமைக்கலாம். வீட்டில் விருந்தினர் அறை அமைக்கும் பொழுது மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு சரியான விருந்தினர் அறை அமைத்து நம் உறவுகளுக்கு பலம் சேர்ப்போம். 82205-44911