செல்லபிராணிகள் வளர்ப்பில் அங்கம் வகிக்கும் வாஸ்து

செல்லபிராணிகள் வளர்ப்பில் அங்கம் வகிக்கும் வாஸ்து

 

இன்றைய வாஸ்து பகுதியில், செல்லப்பிராணிகளின் வளர்ப்பு என்பது நமது வாழ்க்கையில் எத்தகையச் சிறப்பும், முக்கியத்துவமும் பெற்றுள்ளது என்பதைப் பற்றிக் காணவிருக்கிறோம்.

 

கெளரவச் சின்னம்

முந்தைய காலத்தில் செல்லப் பிராணிகள் என்பது நம் பாதுகாப்புக்காகவும், அன்பை வெளிப்படுத்தவும் வளர்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் செல்லப்பிராணிகளுக்கு நிறைய வீடுகளில் காவல் இருக்கும் சூழல் நிலவுகிறது. அதுமட்டுமின்றி செல்லப்பிராணிகளின் வளர்ப்பை சமூகத்தின் ஒரு கெளரவச் சின்னமாகவே கருதுகின்றனர்.

 

எப்படி இருந்தாலும் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது நம் வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கு காண்போம்.

 

 

செல்லப்பிராணி வளர்ப்பு

மேலை நாட்டில் ஒரு பெண்மணி மிகவும் பாசத்துடன் ஒரு நாய் வளர்த்து வந்தார். திடீரென அப்பெண்மணிக்கு உடல் நலம் குன்ற சிகிச்சைக்காக மருத்துவரை அணுகினார். மருத்துவர் அப்பெண்மணியைச் சோதித்து பார்த்துவிட்டு அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறினார்.

மருத்துவரின் இந்த பதிலால் மிகவும் கவலையுற்ற அந்த பெண் தன் மனதை சமாதானம் செய்துகொண்டு , வழக்கம்போல் தனது செல்லப்பிராணியுடன் நடைபயிற்சிக்கு சென்று வந்தார். திடீரென ஒரு நாள் அவர் வளர்த்த அந்த செல்ல நாய் இறந்துவிட்டது.

 

துக்கத்திலும் ஒரு நன்மை

அந்த நிகழ்வு அப்பெண்மணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் இந்த துக்கத்திலும் ஒரு நன்மை உண்டானது. அதாவது, அப்பெண்மணியின் புற்றுநோய் குணமடைந்தது. இதை அறிந்த அவர் அதை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து கொண்டார். என்னவொரு ஆச்சர்யம்…!! அப்பெண்மணிக்கு புற்றுநோய் இருந்ததற்கான எவ்வித அறிகுறியுமே தெரியவில்லை இதைக் கேள்விப்பட்ட அந்த பெண் வியந்து போனார்.

அதன் பிறகுதான் அவருக்கு தெரியவந்தது அவருடைய நாய் புற்றுநோயின் தாக்குதலால் தான் இறந்து விட்டது என்று.

 

வாஸ்துபடி பிராணி வளர்ப்பு

இது ஒரு உண்மைக்கதை .

செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவை நம் அன்பை பங்கிட்டுக் கொள்வது மட்டுமல்லாமல், நம் துன்பத்தையும் முன்பே அறிந்து அது நம்மை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

 

நம் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்து போனாலோ அது நம்முடைய அல்லது நமக்கு வரப்போகும் ஆபத்தை எடுத்துக்கொண்டது என்று அர்த்தம். தன் எஜமானருக்கு வரும் துன்பத்தையும், ஆபத்தையும் முன்பே அறிந்துகொள்ளும் சக்தி செல்லப் பிராணிகளிலே நாய்க்குத்தான் அதிகம்.

எனவே வாஸ்து வீட்டின் அமைப்பு மட்டுமல்லாது செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.  82205-44911