வாஸ்துவும் கார்செட் அமைப்பும்
இன்று நமது வீட்டில் மகிழ்வுந்து நிறுத்துமிடம் (car shed) எவ்வாறு அமைக்கலாம். அதனால் ஏதேனும் நன்மை உண்டா என்பதைப் பற்றி பார்ப்போம்.
தேரடி
நமது ஊரில் பல கோயில்கள் உண்டு. அந்த கோயில்களுக்கும் தேர் என்கிற விஷயம் உண்டு . என்றைக்காவது தேரானது கோயிலுக்குள் நிருத்தி இருக்கிறார்களா? அல்லது கோயிலுக்குள் அதற்கு என்று தனியிடம் ஏதேனும் உண்டு பண்ணி இருக்கிறார்களா ? காரணம் தேர் என்பது சாலையில் நிற்கக்கூடிய அம்சம். மற்றொன்று திருவிழா நாட்களில் இறைவன் திருவீதியுலா வரும் வாகனமாக இருப்பது தேர்.
அதேபோல் தான் நாம் பிரயாணம் செய்ய உதவுவது நம்முடைய மகிழ்வுந்து (car). அந்த வகையில் மகிழ்வுந்து வண்டியை நம்முடைய வீட்டிக்குள் நிறுத்தி வைத்துக் கொள்ள முடியாது. இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பு காரணமாக, தெருவிலும் நிறுத்தி வைக்க இயலாது.
எவ்வாறு அமைக்கலாம்
நம்முடைய மொத்த வீட்டு அமைப்பில் வடமேற்கு பகுதியிலும், தென்கிழக்கு பகுதியிலும் கார் செட் அமைக்கலாம். அதுவும் எந்த ஒரு மூலையையும் மூடாமல் அமைப்பது சிறப்பு.
எக்காரணம் கொண்டும் தென்மேற்கிலும், வடகிழக்கிலும் கார் செட் அமைக்கக் கூடாது. அப்படியும் தவறுதலாக அமைக்கும் பட்சத்தில் தேவையற்ற ல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.
நவீன கட்டிடங்களுக்கு
இன்றைய நளினமான கட்டிட வளர்ச்சியால் நகர் புறங்களில் தூண் (pillar) அமைத்து கட்டக்கூடிய கட்டிடங்களில் கீழ் தரைதளம் முழுவதும் கார் நிறுத்துமிடமாக (parking) உபயோகித்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் நல்ல அமைப்பாகும்.
வாஸ்துவின் பலன்கள்
வடகிழக்கில் மிக பிரம்மாண்டமான போர்டிகோ அமைத்து, அதன் கீழ் காரை நிறுத்தும் அமைப்பில் பல வீடுகளைப் பார்த்திருப்பீர்கள். அது போன்ற அமைப்புள்ள வீடுகளின் உரிமையாளரின் தலை எப்பொழுதும் பாரமாக இருப்பதை அவர்களால் உணர முடியும். காரணம் வடகிழக்கு என்பது நமது உடலில் தலைக்கு உண்டான பகுதி. காரின் எடை எவ்வளவு இருக்கிறதோ அதே அளவிற்கு அவரின் தலையின் பாரம் இருப்பதாக அவர் உணர்வார். இது போல உங்களது வீட்டில் உங்களது வீட்டில் கார் நிறுத்தியிருந்தால் சிறிது நாட்கள் வேறு இடத்தில் மாற்றி நிறுத்தி பாருங்கள். உங்களுக்குத் தெரியும் மாற்றங்கள்.82205-44911