வாஸ்து ஆலோசனை எப்போது எல்லாம் பெறுவது சிறப்பு
ஒரு இடத்தை வாங்கும் முன்பும் அந்த இடம் வாஸ்து முறைப்படி நம் கட்டக் கூடிய இடத்திருக்கு சரியானதாக பொருந்துமா என்பதை பார்த்து நிபுணரின் ஆலோசனையுடன் வாங்குவது சிறப்பு.
மின்சாரத்தை யாரவது பார்த்தது உண்டா என்றால் யாரும் இல்லை என்று தான் கூறுவார்கள். ஆனால் மின்சாரத்தின் பயனை இன்று அனுபவிக்காத நபர்களே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அதே போல் வாஸ்துவும்,
- காலிமனையோ அல்லது விவசாய நிலமோ வாங்கும் போதும்,
- வரைபடம் தயாரிக்கும் போதும்,
- புது வீட்டை அல்லது கட்டிடத்தை கட்ட முற்படும் போது,
- கட்டிய கட்டிடங்களை விலைக்கு வாங்கும் போது,
- நாம் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் விற்பனைக்கு வரும் நிலங்களை வாங்கும் முன்பும்,
- நம்முடைய மொத்த இடத்தில் ஒரு பகுதியை விற்பனை செய்யும் முன்பும்,
- குடும்ப சொத்துகளை பாக பிரிவினை செய்யும் போதும்,
- வீடுகள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபரஸ்தலங்கள், வணிக ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்கள், இது போன்ற எந்த மாதிரியான கட்டிடங்களை கட்டும் முன்பு வாஸ்து ஆலோசனை பெறுவது சிறப்பு.
தொழில் முடக்கம், பண கஷ்டம், குடும்ப உறவுகளில் விரிசல், தொடர் பிரச்சனைகள் வருவது போல ஒரு வீட்டில் நீங்கள் கண்டுபிடிக்கும் பட்சத்தில், அதை சரி செய்யும் போதும் அனுபவப்பட்டவர்கள் ஆலோசனைக்கு பிறகு செய்வது சிறப்பு. 82205-44911