சுவாதி நட்சத்திர குணாதிசியங்கள் !!
சுவாதி :
சுவாதி நட்சத்திரத்தின் இராசி : துலாம்
சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
சுவாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன்
பொதுவான குணங்கள் :
- இறைநம்பிக்கை மிகுந்தவர்கள்.
- சிறந்த அறிவு, ஞாபக சக்தி கொண்டவர்கள்.
- கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.
- தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
- பரந்த மனப்பான்மை உடையவர்கள்.
- இரக்கக்குணம் கொண்டவர்கள்.
- சிக்கனத்தில் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள்.
சுவாதி முதல் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- அறிவாளிகளாக இருப்பார்கள்.
- தைரியசாலிகளாக இருப்பார்கள்.
- தர்ம நியதி படி நடப்பார்கள்.
- பேச்சுத்திறமை உடையவர்கள்.
- பல மொழிகளை அறிந்தவர்கள்.
- கற்பனைத் திறமை கொண்டவர்கள்.
- திட்டமிட்டுச் செயல்படுபவர்கள்.
சுவாதி இரண்டாம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.
- சுயநலம் உடையவர்கள்.
- சொத்து சேர்க்க விரும்புவர்கள்.
- நல்ல தோழர்களாக திகழ்வார்கள்.
- மனோதைரியம் உடையவர்கள்.
- வாய் ஜாலம் உடையவர்கள்.
சுவாதி மூன்றாம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
- எதையும் செய்யக்கூடியவர்கள்.
- அரக்க குணம் உடையவர்கள்.
- பழிவாங்கும் எண்ணம் உடையவர்கள்.
- அவசர முடிவினால் பிரச்சனைகளில் தானே மாட்டிக்கொள்வார்கள்.
- கலகம் செய்வதில் வல்லவர்கள்.
சுவாதி நான்காம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- கலகத்தில் விருப்பம் உடையவர்கள்.
- நல்லொழுக்கம் உடையவர்கள்.
- ஆடம்பரத்தில் விருப்பம் உள்ளவர்கள்.
- கடமையுணர்வு உடையவர்கள்.