வாஸ்து படி யோகம் தரும் வீடு என்பது எது?
எனது அனுபவத்தில் ,வாஸ்துபடியான யோகம் தரும் படி மற்றும் அடுக்குமாடி
வீட்டு அமைப்புகளை பற்றி பார்ப்போம்.
- இடம் மற்றும் வீடு சதுரம், செவ்வகமாக இருக்க வேண்டும்.
- நான்கு புறமும் மதில் (compound) சுவர் இருக்க வேண்டும்.
- தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு பள்ளமாகவும் இருக்க வேண்டும்.
- தென்மேற்குப் படுக்கையறை (Bed room), வடகிழக்கு வரவேற்ப்பரை, தென் கிழக்குச் சமையலறை, வடமேற்குக் கழிவறை ஆகியவை இருப்பது சிறப்பு .
படிக்கட்டுகள் அமைக்கும் இடம்
- வடகிழக்கு தவிர மற்ற இடங்களில் வெளிப்பகுதியில் வரலாம்.
- தெற்கு நடுபகுதிகளில் வீட்டு உள் அமைப்பில் வரலாம்.
- பூஜை அறை தென்கிழக்கு சார்ந்தும், வடமேற்கு சார்ந்தும் இருப்பது சிறப்பு.
அடுக்குமாடி குடியிருப்புக்கு உகந்த வீடு என்பது எது?
- வடகிழக்கு வரவேற்பறை மிக மிக சிறப்பு (அவசியம்).
- தென்மேற்குப் படுக்கையறை (Bed room) மிக மிக சிறப்பு .
- வட மேற்கு கழிவறை சரியான அமைப்பு .
- தென் கிழக்கு சமையலறை மிக மிக சிறப்பு. இரண்டிற்கும்
- பொதுவானது உச்ச வாசல் அமைப்பு.
இதுபோல இன்னும் குறிப்பிடும் படியான பல அமைப்புகள் உண்டு. இனி, நீங்கள் தான் நல்ல யோகம் தரும் வீட்டமைப்பை கண்டுபிடிக்க வேண்டும். 82205 44911