குழந்தை பாக்கியம் தள்ளி போக வாஸ்துபடி என்ன காரணம்

       

                                   குழந்தை பாக்கியம் தள்ளி போக வாஸ்துபடி என்ன காரணம்?

ஐயா, வணக்கம்! நான் தற்சமயம் மலேசியாவில் இருக்கிறேன். நான் கடந்த இரண்டு வருடத்தில் மூன்று வீடுகள் மாற்றிவிட்டேன். ஆனாலும் கஷ்டங்களும், கடன்சுமைகளும் தொடர்கிறது. திருமணமாகி 7 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் தள்ளிப்போகிறது. இதற்கு என்ன காரணம் ஐயா, பரிகாரம் என்பது ஏதாவது உண்டா?

அன்பு நண்பரே! கவலை வேண்டாம். உங்களுக்கான தீர்வு கிடைத்து விட்டது என்று நம்புங்கள். நான் இங்கு குறிப்பிடும்படியான தவறான அமைப்புகள் உங்களது வீட்டில் இருக்கும் பட்சத்தில் இதுபோல பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும்.

நீங்கள் உங்களுடைய வீடு, வாடகை வீடு என்று குறிப்பிட்டீர்கள். அதுவும் மூன்று வீடு மாற்றி விட்டதாக கூறினீர்கள். இங்கு நான் குறிப்பிடுவது என்னவென்றால், நீங்கள் மாறிய அனைத்து வீடும் ஒரே மாதிரியான அமைப்பிலேயே இருக்கும் என்பது எனது ஆணித்தரமான கருத்து.

ஒரு வேலை நீங்கள் மலேசியாவில் வீடு வாடகைக்கு எடுத்திருந்தாலும், அந்த வீடும் அதேபோல தோற்ற அமைப்பிலேயே தொடரும் என்பது எனது ஆணித்தரமான கருத்து. நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கலாம், மலேசியாவில் இருக்கலாம், லண்டனில் கூட இருக்கலாம், உங்களுடைய எண்ணமும் உங்களுடைய குணாதிசயங்களும் எங்கு சென்றாலும் மாறாது.

அதே போல்தான் இந்த வீட்டமைப்பின் தொடர்ச்சியும்….
இனி உங்களுடைய வீட்டின் தவறான அமைப்புகளை பார்ப்போம்.

தென்கிழக்கு பகுதியில் சமையலறை வராமல் வேறு பகுதியில் வருவது.

தென்மேற்கில் உள்ள மாஸ்டர் பெட்ரூமை பயன்படுத்தாமல், வேறு பகுதியில் உள்ள ரூமை பெட்ரூமாக பயன்படுத்துவது.

வடகிழக்கு பகுதியிலும், தென்மேற்கிலும் பூஜையறை வருவது.

தென்மேற்கு வாசல் அமைப்பு.

தென்மேற்கு உள்மூலை படி அமைப்பு.

தென்மேற்கு போர்டிக்கோ அமைப்பு.

தென்மேற்கு பகுதியை வாடகைக்கு மூன்றாம் நபருக்கு விடுவது.

தென்கிழக்கு கிழக்கு தெருகுத்து.

தென்மேற்கு, மேற்கு மற்றும் தெற்கு தெருகுத்து அல்லது தெருபார்வை வருவது.

வடமேற்கு வடக்கு தெருகுத்து வருவது.

தென்மேற்கிலும், தென்கிழக்கிலும், கழிவுநீர் குழிகள், கழிவறை அமைப்புகள் வருவது.

நான்கு புறமும் காம்பவுண்ட் இல்லாத அமைப்பு.

கிழக்கு பகுதி மற்ற வீட்டுடன் பொது சுவராக வருவது.

வடக்கு பகுதி மற்ற வீட்டுடன் பொது சுவராக வருவது.

வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு வருவது.

இதுபோல இன்னும் குறிப்பிடும் படியான பல அமைப்புகள் உண்டு.

இனி, நீங்கள் தான் நல்ல வீட்டமைப்பை கண்டுபிடிக்க வேண்டும். அப்போது தான் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். 82205-44911