தெருக்குத்துக்கு வாஸ்து வளம் தருமா?
தெருக்குத்தின் முக்கியத்துவம்
ஆதிகாலம் முதல் இன்று வரை நாம் வீடு கட்டத் தேர்ந்தெடுக்கும் சாலையையும், தெருவையும் மையமாக வைத்தே நாம் கட்டும் வீடுகளின் கட்டிட அமைப்புகள் உள்ளன.
இந்த சாலையும், தெருவும் நாம் கட்டக் கூடிய கட்டடங்களுக்கு நல்ல தெருக்குத்து அல்லது சாலைக் குத்தாக அமைந்தால், அவர்களுடைய வாழ்வு மிகமிகமிக அற்புதமான வாழ்வாக அமைந்துவிடும். அத்துடன் இல்லாமல் அளவற்ற செல்வச் செழிப்பையும் பெயர் புகழுடன், தலைவர்களுக்கான அந்தஸ்துடன், மிக உயரிய பதவிகளுடனும் வசிக்கக் கூடிய சூழ்நிலைகளை அந்த நல்ல தெருக்குத்து உருவாக்கிக் கொடுக்கும்.
தெருக்குத்தினால் விளையும் நன்மைகள்
எவர் ஒருவர் நல்ல தெருக்குத்துடன் வசித்து வருகிறாரோ, அவர் மேலும் புதிதாக வாங்கக்கூடிய அனைத்து இடங்களும் அந்த நல்ல தெருக்குத்துவை ஒத்தவை போலவே அமையும்.
அன்பர்களே , நல்ல தெருக்குத்து எவ்வளவுக்கு எவ்வளவு, நன்மைகளைத் தருமோ அதேபோல் தவறான தெருக்குத்து அமைப்பு அவ்வளவுக்கு அவ்வளவு தீமைகளைத் தரக் கூடியது.
எனவே, அன்பர்களே, நீங்கள் எங்கு புதிதாக நிலம், வீடு வாங்கும்போது வாஸ்து ஆலோசனை பெற்று நல்ல தெருக்குத்துள்ள இடங்களைத் தேர்ந்தெடுப்பது மிகச் சிறப்பான வாழ்வைத் தரும். 82205 44911