வாஸ்துவும் பஞ்சபூதங்களை உட்கிரகிக்கும் கட்டிட அமைப்பும்
பஞ்ச பூதங்களின் சரியான அமைப்பான வாஸ்து நமக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்க வேண்டுமானால் அதற்கு நாம் இருக்கும் இருப்பிடத்தை வாஸ்து முறைப்படி சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
நன்மை பயக்கும் பஞ்சபூதங்கள்
பஞ்சபூதங்கள் என்பது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று. அதன் நன்மை பயக்கும் இயல்புகளை நாம் கிரகித்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் வீட்டை அதற்கேற்றவாறு சரியாக அமைத்துக்கொண்டு பஞ்சபூதங்களுக்கு அதற்கு உண்டான சரியான இடத்தை அமைத்துக்கொடுப்பதே ஆகும்.
பஞ்சபூதங்களின் முக்கிய அம்சம்
அந்த வகையில் முதல் அம்சமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, நம்முடைய கட்டிட அமைப்பு கட்டிட அமைப்பு வீட்டின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் வாஸ்துபடி அமைக்கப்பட வேண்டும். எந்த கட்டிடமாக இருந்தாலும் அது முழுமையான வாஸ்து பலன்களை அளிக்க வேண்டுமென்றால் அது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டுமே இருக்க வேண்டும். இந்த வடிவங்களில் அமைந்த கட்டிடங்களில் மட்டுமே பஞ்ச பூதங்களின் அமைப்பை சரியாக பயன்படுத்த முடியும். 82205 44911