இறையுணர்வை உண்டாக்கும் வாஸ்து முறையிலான வீட்டமைப்பு

இறையுணர்வை உண்டாக்கும் வாஸ்து முறையிலான வீட்டமைப்பு

 

மானிடரின் குணாதிசயங்கள்

 

இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவை என்பது யாவரும் அறிந்த உண்மை .

அதில் மனித இனம் மட்டுமே இறைவனைத் துதித்தும் பாடல்களைப் பாடியும், கேட்டும் மகிழ்ந்து வருகிறார்கள். எல்லா மனிதர்களுக்குமே இறைவழிபாடு என்பது கிடையாது. சில பேர்கள் மட்டும் இறைவனை எல்லா நேரங்களிலும் பூஜித்து வருகிறார்கள். இன்று சில பேர் பகுதி நேரமாக இறை வழிபாடு செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் இறைவனை நினைப்பது கூட கிடையாது. மனித இனமான நாம் ஒரே ஒரு உயிரினம் தான், ஆனால் நம்முடைய குணாதிசயங்களோ நாம் ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாக அமைகிறது.

 

நாம் பிறக்கும் போது யாரும் நம்மீது  அதைச் செய், இதைச் செய் என்று திணிப்பதில்லை , நமது வளர்ப்பு முறையிலும், படிக்கும் போதும் ஏற்படும் பழக்க வழக்க முறைகளிலுமே நம்முடைய வாழ்க்கை முறை அமைந்து விடுகிறது.

 

ஆன்மிகத்திற்குரிய வீடமைப்பு

 

ஒரு சிலர், மனநிம்மதிக்காகவே இறை வழிபாடு செய்கிறார்கள். இன்னும் சிலபேர் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையில் இறைவனை வழிபடுகிறார்கள்.

ஆனால் வாஸ்துபடி ஆராய்ந்து பார்க்கையில் சில, பல தவறான அமைப்புகளில் குடியிருப்பவர்கள் மட்டுமே ஆன்மிகத்தில் அதீத பற்றும், அதீத ஞானமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஆன்மிக வழிக்கு அழைத்துச் செல்ல குடியிருக்கும் வீடும் ஒரு வகையில் காரணமாக அமைகிறது. இருப்பினும் ஆன்மிக அனுபவத்திற்குத் தகுதியான வீடு என்று பொதுவாக கூறிவிட முடியாது. அவரவர் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்து தான் வாஸ்து அமையும். ஆயினும் ஆன்மிக ஆர்வத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு  உண்டு என்பதே உண்மை . 82205 44911