தரமான மனைப்பிரிவில் அங்கம் வகிக்கும் வாஸ்து – மூன்றாம் தரம்

தரமான மனைப்பிரிவில் அங்கம் வகிக்கும் வாஸ்து – மூன்றாம் தரம்

 

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்" என்ற பழமொழிக்கு ஏற்ப வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் எவ்வளவோ செலவு செய்து வீடு கட்டுகிறோம். ஆனால் "அது வாஸ்து முறைப்படித்தான் அமைந்துள்ளதா?" என்று ஒரு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரை அழைத்துப் பார்க்க பெரும்பாலானவர்களுக்கு விருப்பம் இல்லை .

வீட்டைக் கட்டி முடித்தப் பின் எதாவது கஷ்டங்களோ , பிரச்சனைகளோ வரும்போது நமக்கு தெரிந்தவர்கள் நம் வீட்டில் எதாவது தவறாக அமைந்திருக்கிறது அதனால் தான் நீங்கள் துன்பப்டுகிறீர்கள் என்று கூறினால் அதற்கு பின் தான் வாஸ்து நிபுணரை தேடித் ஓடுகிறோம். கட்டிய வீட்டை இடிக்கச் சொன்னாலோ எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

 

வீடு கட்டுவதற்கான முதல் படி

வீட்டைக் கட்டிய பிறகு கஷ்டங்களை அனுபவித்து அதன் பிறகு அதை சரி செய்வதை விட, வீட்டை கட்டுவதற்கு முன்பே அனைத்தும் சரியாகத்தான் இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. வீடு தான் நம் வாழ்க்கையின் ஆதாரமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட வீட்டைக் கட்டத் தொடங்கும் முன் நாம் தேர்ந்தெடுக்கும் மனை சரியாக வாஸ்துப்படி அமைந்துள்ளதா என்று முதலில் சரி செய்து கொள்ளுங்கள். இதுவே வீடு கட்டுவதற்கான முதல் படி.

ஏன் மனையை தேர்ந்தெடுக்க வாஸ்து ஆலோசகரை அணுக வேண்டும் என்றால் மனைக்கு எந்தப் பக்கம் சாலைகள் உள்ளன என்பதை மட்டும் பார்த்தால் போதாது. அதன் சுற்றுப்புறங்களையும் ஆராய வேண்டும். மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள்,ஏரிகள் முதலானவை நம் மனையை சுற்றி இருந்தால், அது சரியான இடத்தில் இருக்கின்றனவா? என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

 

மூன்றாம் தரமான மனை

இப்பொழுது மூன்றாம் தரமான மனையைப் பற்றி பார்ப்போம். மனைக்கு தெற்கிலோ அல்லது மேற்கிலோ அல்லது தெற்கு மற்றும் மேற்கிலோ சாலை அமைந்திருந்தால் அது மூன்றாம் தரமான மனையாகும்.

 

ஆலோசனை

அதுமட்டுமல்லாமல் மனைகள் பொதுவாக சதுரமாகவோ , செவ்வகமாகவோ தான் இருக்கவேண்டும். மனைகள் முக்கோண வடிவமாகவோ அல்லது வட்ட வடிவமாகவோ இருந்தால் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தென்மேற்கு உயர்ந்து வடகிழக்கு

தாழ்ந்து இருப்பது நலம். அதை தவிர்த்து தென்மேற்கு தாழ்ந்து வடகிழக்கு உயர்ந்து இருக்கும் மனையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.82205 44911