தரமான மனைப்பிரிவில் அங்கம் வகிக்கும் வாஸ்து – இரண்டாம் தரம்

                                      தரமான மனைப்பிரிவில் அங்கம் வகிக்கும் வாஸ்து – இரண்டாம் தரம்

 

முன்பு கூறியது போல வாஸ்து படி சிறந்த முறையில் வீட்டை அமைக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் வாஸ்துப் படி உள்ள நல்ல மனையைத் தேர்வு செய்ய வேண்டும். வீடு கட்ட நினைப்பவர்கள் வீட்டிற்கு முக்கியத்துவம் தருவதை காட்டிலும் மனைக்கு முக்கியத்துவம் கொடுத்தல் மிகவும் அவசியம்.

 

ஆலோசிக்க வேண்டிய சமயம்

சிலர் மனையைத் தேர்ந்தெடுப்பதில் ஆகட்டும், வீடுகட்ட ஆரம்பிக்கும் சமயத்தில் ஆகட்டும், வாஸ்து வல்லுனர்களை கலந்து பேசாமல் அஸ்திவாரம் போட்டுச் சுவர்களை எழுப்பிய பின் வல்லுனர்களை சந்திப்பதுண்டு. இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதைப் போன்றது. மனையைத் தேர்வு செய்யும் முன்பே சாஸ்திரத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவர்களைக் கலந்து ஆலோசித்து இடத்தை நிர்ணயிப்பது நன்மை தரும்.

 

இரண்டாம் தரமான மனை

நாம் ஏற்கனவே முதல் தரமான மனையின் சிறப்பம்சங்களைப் பற்றி பார்த்திருக்கிறோம். எல்லோருக்கும் முதல் தரமான மனை அமைவது சற்று கடினமே. ஆகையால் அதற்கு அடுத்தாற்போல் இரண்டாம் தரமான மனையைப் பற்றி பார்ப்போம். முதல் தரமான மனை என்பது எல்லா விதத்திலும் நன்மை பயக்கும். இரண்டாம் தரமான மனை என்பது சிறு குறைபாடுகள் கொண்டுள்ள மனை . அதனால் நன்மைகள் அதிக அளவிலும், தீமைகள் நம்மை பாதிக்காத அளவில் சிறியதாகவும் இருக்கும்.

 

சிறப்பம்சம்

பொதுவாக எந்த ஒரு மனையாக இருந்தாலும் கண்டிப்பாக, அது சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தென்மேற்குப் பகுதி உயர்ந்தும், வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

இரண்டாம் தரமான மனை என்பது வடக்கு பகுதியில் சாலை அல்லது கிழக்கு பகுதியில் சாலையைக் கொண்டதாக இருக்கும். ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் சாலை அமைந்திருக்கும். வடக்கு அல்லது கிழக்கு பார்த்த மனையே இரண்டாம் தரமான மனையாகும்.

ஒரு மனையை வாங்குவதற்கு முன்பு இந்த விஷயங்களை மனதில் கொண்டு ஒரு சிறந்த வாஸ்து ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று வாங்குவது எல்லா வகையிலும் சிறந்ததாகும். -82205 44911