வாஸ்து தவறுக்கு பரிகாரம் உண்டா?
அன்பர்களின் கேள்வி
என்னை தொடர்பு கொண்டு பேசுபவர்களில் அதிகப்படியான நபர்கள் சார் எனக்கு இந்த பிரச்சனை உண்டு , அந்த பிரச்சனை உண்டு அதற்கு ஏதேனும் ஒரு பரிகாரம் உண்டா என்று தான் கேட்கிறார்கள். நானும் அவர்களுக்கு அந்த நேரத்தில் பதில் கூறியிருந்தாலும் நீங்கள் அனைவரும் பயன் அடையும் வகையில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
வசிப்பிடத்தின் அமைப்பு
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு (ஒவ்வொரு action க்கும் reaction உண்டு ) அதேபோல் 1+1 = 2 தான் வரும் இந்த இடத்தில் 1+1=11/2 அல்லது 1+1 = 2 1/2 இது போல் விடைகள் வருமா என்றால் வராது என்று தான் கூறுவீர்கள்.
ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அந்த இடத்தில் வசிக்கக்கூடிய நபர் மீது நல்ல தாக்கத்தையோ, கெடுதலான தாக்கத்தையோ அந்த கட்டிடம் தினம் தினம் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
பரிகார பொருட்கள்
இந்த அடிப்படை தெரியாத மக்கள் பரிகாரம் என்கின்ற பெயரில் வாங்கி வைக்கும் பொருட்களான
1. பிரமிடு
2. செப்பு தகடுகள்
3. கிரிஸ்டல்கள்
4. வாஸ்து பரிகார பூஜைகள்
5. வாஸ்து மணி
6. வாஸ்து மரம்
7. நீர் விழ்ச்சி
8. வாஸ்து குபேர பொம்மைகள்
9. வீட்டைச் சுற்றிலும் செப்பு கம்பி பதித்துக்கொள்வது
10. பாசிடிவ் எனர்ஜி , நெகட்டிவ் எனர்ஜி
11. வாசலுக்கு எதிரே கண்ணாடி மாட்டுவது,
12. விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் சிலை வைப்பது
இது போல இன்னும் பல பொருட்கள் உண்டு.
அன்பு நண்பர்களே இது போன்ற விஷயங்களை நம்ப வேண்டாம். இது போன்ற பொருட்களால் தற்காலிக தீர்வு தான் கிடைப்பது போல தோன்றினாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காது. பொது மக்களாகிய நாம் தான் கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.