வாஸ்து சாஸ்திரப்படி கிழக்குப் பகுதி
கிழக்குப் பகுதி
கிழக்குப் பகுதி என்பது இந்திரனின் திசை என்போம். நாம் ஆரோக்கியமாக இருக்கவும், குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவும், குறித்த வயதில் திருமணம் நடக்கவும், திருமணத்திற்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்த திசையே காரணமாக அமைகிறது.
கிழக்குப் பகுதி காம்பவுண்ட் சுவர்
கிழக்குப்பகுதி காம்பவுண்ட் கோணல் மாணலாக இல்லாமல் நேராக இருக்க வேண்டும். நமது வீட்டிற்கும் காம்பவுண்டிற்கும் குறைந்தது 3 அடி முதல் 30 அடிவரை இடைவெளி இருக்க வேண்டும். கிழக்குக் காம்பவுண்ட் நம்முடையதாக இருக்க வேண்டும் இந்தக் கிழக்குக் காம்பவுண்டில் இந்தக் கிழக்குக் காம்பவுண்டில் யாருடனும் கூட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. இந்தப் பகுதியில் மரங்கள் வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
வரக்கூடாதவைகள்
கிழக்குப் பகுதியில் வரக்கூடாதவைகள் தண்ணீர்த்தொட்டி, கழிவுநீர்த் தொட்டி, கழிவறை , கார் பார்க்கிங், பயோகேஸ் இன்னும் இதுபோல் பல அமைப்புகள் உண்டு.
எனவே அன்பு நண்பர்களே , கிழக்குப் பகுதியை மிக சரியாகக் கையாண்டு சுகமான வாழ்க்கை வாழ வாஸ்து சாஸ்திரம் வழி வகுத்துள்ளது. இந்திரனின் திசையைத் திறந்து வைத்து இந்தியரத்துடன் வாழ்வோம்.