சாமை மிளகு பொங்கல்

சாமை மிளகு பொங்கல்

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – 500 கிராம்,

பாசிப்பருப்பு – 250 கிராம்,

இஞ்சி (துருவியது) – இரண்டு தேக்கரண்டி,

நெய் – 2 மேசைக்கரண்டி,

ப.மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

முந்திரி – 10 கிராம்,

சீரகம் – 2 தேக்கரண்டி,

மிளகு – 3 தேக்கரண்டி,

கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சாமை அரிசியை கல் அரித்த பின் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

குக்கரில் ஊறவைத்த சாமை அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும்.

கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, முந்திரி, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்து வேகவைத்த சாமையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

சுவையான சாமை மிளகு பொங்கல் தயார்.