இந்த உலகமே எனர்ஜி ஃபீல்ட்ஸ்ல தான் இயங்கிக்கிட்டிருக்கு. காஸ்மிக் எனர்ஜி. நம்ம உடலைச் சுத்தி பயோப்ளாஸ்மிக் எனர்ஜின்னு ஒரு ஃபீல்ட் இருக்கு. சாதாரண கண்களுக்கு அது தெரியாது.
கிர்லியன் கேமரான்னு ஒண்ணு இருக்கு. Developed by Russians and Germans. அது மூலமா நம்மைப் படம் எடுத்தா நம்மோட physical body தெரியாது. நம்மைச் சுத்தி இருக்கற (கலர் கலரா) aura தான் போட்டோவா வரும்.
வெறும் கண்ணாலயும் இதை உணரக்கூடியவங்களும் இருக்காங்க. அவங்களுக்கு clairavoyant அப்டின்னு பேர்.
அவங்களால அந்த எனர்ஜி ஃபீல்டை உணரவும் முடியும்.
இந்த இடத்துல பாசிட்டிவ், நெகட்டிவ் எனர்ஜி பத்தி சொல்லியாகணும்.
நம்ம உடல்ல ஏதாச்சும் problem இருந்தா அந்த இடத்துல அந்த எனர்ஜி ஃபீல்ட் dip ஆகி இருக்கும். கிர்லியன் கேமரா படங்கள்ள அதைப் பார்க்க முடியும். Pranic healers இந்த விஷயத்தைத்தான் பின்பற்றி healing செய்யறாங்க.
ஒரு இடத்தோட எனர்ஜி ஃபீல்டை நீங்களே கொஞ்சம் உணரமுடியும். கோவில்ல இருக்கும்போது மனசு லேசா உணர்றீங்க. அங்க எல்லாமே பாசிட்டிவ் விஷயங்கள் தான் நடக்குது. அதே ஒரு பார்ல நெகட்டிவ் விஷயங்கள் தான் நடக்குது. அங்க இருக்கும்போது கொஞ்சம் uncomfortable-ஆ உணர்வீங்க.
நம்மளுக்கு மட்டுமில்லை. திடப்பொருள்களுக்கும் இந்த aura உண்டு.
நம்மளோட aura உடலைச் சுற்றிக் கொஞ்சமாத்தான் இருக்கும். ஞானிகளோட aura ரொம்ப தூரம் வரை பரவி இருக்கும். அவங்க கூட இருக்கும்போது நாம comfortable-ஆ உணர்றது இதனால தான்.
கோவில்களோட அமைப்பு இந்த காஸ்மிக் எனர்ஜி ஃபீல்டை தக்க வச்சுக்கக் கூடியது. அந்த சக்தியை நாம உள்வாங்கிக்க முடியும்.
சாமி கும்பிடும்போது கை கூப்பி வணங்கறமே அது தப்பு.
ஆக்சுவலா இரு கைகளையும் விரிச்சு (முஸ்லிம்ஸ் பண்ற மாதிரி) எனர்ஜியை ரிசீவ் பண்ற மாதிரி வச்சிருந்து கடைசியில இரு கைகளையும் ஒண்ணு சேர்த்து அந்த எனர்ஜியை வாங்கி எடுத்திட்டு போற முறை தான் சரியானது.
காஸ்மிக் எனர்ஜியை நாம உள்வாங்கிக்கறதுக்கு மூணு சோர்ஸ் இருக்கு.
ஒண்ணு தலை. ஆனா முடி வளர்த்துக்கறோம். (புத்தமதத் துறவிகள் மொட்டையடிச்சுக்கறது இந்த எனர்ஜியை ரிசீவ் பண்ண தான்.)
ரெண்டாவது உள்ளங்கால்கள். ஷூ, செருப்பு போட்டுக்கறோம்.
மூணாவது உள்ளங்கைகள். அது மூலமா தான் எனர்ஜியை வாங்க முடியும்.
கோவிலுக்குள்ள போகும்போது மொட்டையடிக்கறது, செருப்பு போடாமப் போறது இதெல்லாம் காரணமாத்தான். தவிர, ஈரம் காஸ்மிக் எனர்ஜியை எளிதில் உள்வாங்கும். அதுக்காகத்தான் கோவில்கள்ள குளம் அமைச்சு குளிச்சிட்டு அந்த ஈரத்தோட போகச்சொல்வாங்க
ஞானிகளோட aura அவங்க இறந்த பின்னாலும் நிலைகொண்டிருக்கறதா நம்பப்படுது. இன்னொன்னும் கவனிங்க. இந்த உலகத்தில வாழற எல்லா உயிரினங்களும் ஒண்ணு தான்கற தத்துவம் கேள்விப்பட்டிருப்பீங்க. காஸ்மாஸ் எனப்படற அண்டவெளில எல்லாமே ஒண்ணு தான். இந்த எனர்ஜி ஃபீல்ட் மூலம் communicate பண்ணவும் முடியும் (data transfer) கிருஷ்ணர் அர்ஜுனருக்கு கீதையை ஒரு நொடில சொன்னாராம். கற்பனையோ உண்மையோ சாத்தியத்துக்கு வழிகள் இருக்கு. விஞ்ஞானம் தான் மெய்ப்பிக்கனும். இப்போதைக்கு இந்த thread இங்க முடியுது.
Source: http://mannankkatti.blogspot.com/