உடல்நலக் குறைவால் நெல் ஜெயராமன் காலமானார்

இயற்கை விவசாயியான நம்மாழ்வார் உடன் இணைந்து முதலில் இயற்கை விவசாயம் தொடர்பான பல விழிப்பு உணர்வு பிரச்சாரங்களில் நெல் ஜெயராமன் ஈடுபட்டு வந்தார்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவரான நெல் ஜெயராமன் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் பெரும் பாதிக்கப்பட்டிருந்த ‘நெல்’ ஜெயராமான் இன்று அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தவருமான நெல் ஜெயராமன் 9-ம் வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ளார். இயற்கை விவசாயியான நம்மாழ்வார் உடன் இணைந்து முதலில் இயற்கை விவசாயம் தொடர்பான பல விழிப்பு உணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

அதன் பின்னர் தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி பயனமானவர் 169 பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து மீட்டெடுத்தார். தொடர்ந்து பல்வேறு இயற்கை விவசாயிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வந்தவர் கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ‘நெல்’ ஜெயாராமன் இன்று உயிரிழந்தார்