சுரைக்காய் தோசை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
தோசை மாவு – 2 கப்
நறுக்கிய சுரைக்காய் – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 5
தக்காளி சிறியது – 1
ப.மிளகாய்/வற்றல் – 3
பூண்டு – 2 பல்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் தேவைக்கு
செய்முறை :
நறுக்கிய சுரைக்காயை மிக்ஸியில் வழுவழுப்பாக அரைத்து தோசை மாவில் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
வதக்கல் ஆறியதும் மிக்ஸியில் வழுவழுப்பாக அரைத்து மாவில் கலக்கவும்.
பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
மாவை நன்கு கிண்டி, தோசையாக வார்த்து எடுக்கவும்.