பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
பூண்டு -1/4 கிலோ
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எலுமிச்சம் பழம் – 1
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
மல்லி விதை –1 ஸ்பூன்
மிளகாய் பொடி – 5 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
செய்முறை :
பூண்டை உரித்து கொள்ளவும்
வாணலியில் அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பூண்டை போட்டு வதக்கவும்.
எண்ணெய் அதிகம் சூடாகாமல் மிதமான சூட்டில் வதக்கவும்.
சற்று சிவந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியையும் உப்பையும் போட்டு கிண்டி, அடுப்பை உடனே அணைத்து விடவும்.