கம கமக்கும் வெஜ் கீ ரைஸ் செய்யும் முறை

வெஜ் கீ ரைஸ்

கம கமக்கும் வெஜ் கீ ரைஸ் செய்யும் முறை

தேவையான பொருள்கள் :

பாசுமதி அரிசி – 2 ஆழாக்கு

கேரட்,பீன்ஸ்,பட்டாணி, – கால் கப்

வெங்காயம் – ஒன்று

நெய் – முன்று மேசை கரண்டி

பிரிஞ்சி இலை – இரண்டு

பட்டை – ஒரு அரை அங்குலம் ஒன்று

கிராம்பு – 2

ஏலம் – 2

மிளகு – 5

முந்திரி – 5

இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரு ஸ்பூன்

தக்காளி சிறியது பாதி

கொத்துமல்லி தழை –சிறிது

சிவப்பு பச்சமிளகாய் – ஒன்று

 

செய்முறை :

அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.ரைஸ் குக்கரில் நெய்யை விட்டு பிரிஞ்சி இலை, பட்டை,கிராம்பு,ஏலம்,மிளகு ,ஷாஜீரா ,முந்திரி பொடியாக அரிந்து போட்டு பொரிய விடவும்.

வெங்காயம், இஞ்சி பூண்டு, கொத்துமல்லி சேர்த்து பொன்னிறமாகமல் வெள்ளையாக வதக்கவும்.

கேரட்,பீன்ஸ் பொடியாக அரிந்து பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்

பிற்கு ஊறிய அரிசி சேர்த்து உடையாமல் கிளறவும்.அரிசி ஒன்றுக்கு ஒன்னறை டம்ளர் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி அரை தக்காளி பழத்தை இரண்டாக அரிந்து போட்டு ரைஸ் குக்கர் ஆன் செய்து செய்து முடிக்கவும்.

சுவையான கம கமன்னு வெஜ் கீ ரைஸ் ரெடி..