ஆரஞ்சுப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா

ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சுப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

ஆரஞ்சு பழச்சாறில் ஆலிவ் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

ஆரஞ்சுப்பழத் தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வர வாயு தொந்தரவு நீங்கும்.

ஆரஞ்சுப்பழம் தினமும் சாப்பிட்டு வர ஈரல் சம்மந்தமான வலி குணமாகும்.

தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வருவதால் இருதயம் பலம்  பெரும்.

தூக்கம் வர ஆரஞ்சு பழச்சாற்றில் தேனை கலக்கி சாப்பிட தூக்கம் வரும்.

ஆஸ்துமா நோய் குறைய ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.

தேமல் சரியாக கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரலாம்.

ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் குறையும்.

தலைவலி குறைய எலுமிச்சை, திராட்சை, முருங்கை, புதினா, துளசி, கேரட், பேரீட்சை, தேன், ஆரஞ்சு, மாதுளை, பூண்டு, வெங்காயம் இவைகளை சாப்பிட தலைவலி குறையும்.

ஆரஞ்சுப்  பழத்தோலை பொடியாக்கி தயிருடன் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடலாம்.