நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தினைப் புட்டு..!
தேவையான பொருள்கள்:
தினை அரசி – இரண்டு கப்
தண்ணீர் – நான்கு கப்
வெங்காயம் – இரண்டு
நறுக்கிய காய்கறிகள் – இரண்டு கப்
கடுகு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பில்லை – தேவையான அளவு
பச்சை மிளகாய் – தேவையான அளவு
காரட் – தேவையான அளவு
பீன்ஸ் – தேவையான அளவு
கொடைமிளகாய் – தேவையான அளவு
பட்டாணி – தேவையான அளவு
சோளம் – தேவையான அளவு
செய்முறை:
கேரட், பீன்ஸ், குடமிளகாய் ஆகிய இவை அனைத்தையும் மேற்கண்ட அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பட்டாணி, சோளம் ஆகிய இவைகளை சுத்தம் செய்து மேற்கண்ட அளவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தினை அரிசியை நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். அதே போல தேவையான அளவு பச்சை மிளகாயை காம்பு நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சூடான எண்ணெய்யில் கடுகு சேர்த்து நன்கு தாளித்து வைத்துக் கொள்ளவும்.
மேற்கண்டவற்றுடன் வெங்காயம், கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் ஆகிய இவைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது காய் கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வேக வைக்கவும்.
உடன் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் மேற்சொன்ன தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
தினையை காய்கறிக் கலவையுடன் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறம் வரும் வரையில் நன்கு தினையை வறுக்க வேண்டும்.
பொன்னிறமான பதத்தில் வந்தவுடன் கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.
தண்ணீர் ஓரளவு சுண்டும் சமயத்தில் மிதமான சூட்டை வைத்து உப்புமா பதத்தில் வரும் வரையில் நன்கு கிண்டி இறக்கவும்.
இப்போது நெய் ஊற்றிக் கலக்கி பரிமாற இதன் சுவை அலாதியாக இருக்கும்.