போன் வாங்கனுமா? எந்த போன் வாங்குனா நல்லா இருக்கும்னு தெரிலயா? இதை படியுங்கள் .
ஸ்மார்ட்போன்! நாம வாழ்நாள்ல அடிக்கடி கேள்வி படுற விஷயம் இந்த போன் அவனுக்கு நல்லா இருக்கு எனக்கு சரிபட்டு வரல, அவனுக்கு பேட்டரி நிக்கிது எனக்கு நிக்கமாட்டிக்குதுனு
இதுக்குலாம் காரணம் நம்மலோட உபயோகத்துக்கு ஏத்த போன நாம வாங்குறதில்லன்றதுதான் உண்மை!
சரி அதெப்படி நம்ம யூசுக்கு தகுந்த மொபைல கண்டுபுடிக்குறது. ஒவ்வொரு மொபைல் பார்ட்ஸும் ஒவ்வொரு பர்பாமன்ஸ்க்கு முதல் காரணமா இருக்கும்
நாம உபயோகிக்க போற விதத்துக்கு ஏத்தமாதிரியான பார்ட்ஸ் இருக்குறத சூஸ் பன்னனும்!
Processor:
போன்னு வந்துட்டா முக்கியம்ன்றது ப்ராசசர்;
ப்ராசசர்ல நெறைய கம்பெனி இருக்கு, நெறைய வெரைட்டி இருக்கு நான் இங்க முக்கியா யூஸ் பன்ற ப்ராசசர்ரும் அதோட ஸ்பெக்ஸூம் சொல்றேன்!
முதல்ல ப்ராசசர்ல முக்கியாமா பார்க்க வேண்டியது கோர்(Core).
இந்த கோர் அதிகமா இருக்க இருக்க ப்ராசசர் திறனும் அதிகமா இருக்கும்.
கோர்ன்றது சிம்பிளா சொன்னா ஒரு வழி மாதிரி. நாம கொடுக்குற டாஸ்க் டேட்டா எல்லாம் பயணிக்குற செயல்படுத்த படுற வழி!
ஒரு ரூம்ல 1 சின்ன கதவு வச்சிட்டு அதுல 8 பேர வெளிய வரசொன்னா ஒவ்வொருத்தராதான் வர முடியும்.
அதே ரூம்ல 8 சின்ன கதவு வச்சிட்டு 8 பேர வரசொன்னா ஈசியா வந்துருவாங்க.
இங்க கதவுதான் கோர் 8பேர் தான் நாம போன்ல செய்ற 8 டாஸ்க். கோர் அதிக இருக்க ப்ராசசர் வாங்குறது பர்பாமன்ஸ் அதிகமா இருக்கும்!
Octa Core – 8 Way
Quad Core – 4 Way
Dual Core – 2 Way
Single Core – 1 Way
இப்ப அதிகமா Octa கோர் வர ஆரம்பிச்சிருச்சி இருந்தாலும் பாத்து வாங்குறது நல்லது.
அடுத்து GHz!
GHzன்றது ஒரு டாஸ்க்க ஒரு செகண்ட்ல ப்ராசசர் முடிக்க எடுத்துக்குற டைம். செகண்ட்க்கு 2GHz இருக்க ப்ராசசர்லாம் வந்துருச்சு இப்ப!
Snapdragon, MediaTek, Exynos, Kirin இதெல்லாம் அதிகமா யூஸ் பன்ற ப்ராசசர்!
Kirin – Honor
Exynos – Samsung கம்பனிகளோட சொந்த ப்ராசசர்கள்.
ஆனா ஆன்ட்ராய்ட் மார்க்கெட்ல Snapdragon ப்ராசசர்கள்தான் டாப்பு அடுத்து MediaTek.
இந்த ப்ராசசர்களோட லேட்டஸ்ட் அப்பறம் ஹைஎண்ட் செலக்ட் பன்றது பர்பாமன்ஸ்ஸ அதிகப்படுத்தும்!
RAM:
நாம தற்சமயத்துக்கு உபயோகிக்குற அப்ளிகேஷனோட மெமரிய தக்க வைச்சிக்கிறதுதான் RAM வேலை.
RAMல பெருசா பார்க்இஉறதுக்கு ஒன்னுமில்ல அதோட கேபாசிட்டி 3GB இல்லனா அதுக்கும் மேல இருக்குறது கிட்னிக்கு நல்லது!
ஒரு நல்ல ஸ்மார்ட் போனுக்கு 4-6GB RAM போதுமானது! இந்த 8GB RAMலாம் வரது மக்களோட அறியாமைய உபயோகிச்சு பணம் பறிக்குற நோக்கமே!
ஆத்தி அடுத்து 10GB ரேம் வருதாம்ல!!!
Display:
டிஸ்ப்ளேன்றது வெரும் வெளிக்காட்டு கருவிதான். ஆனா அதோட கலர்ஸ் கொஞ்சம் முக்கியம்.
HD – 720p
FHD – 1080p
UHD – 2160p (4K)
இப்படிதான் டிஸ்ப்ளேவ குறிப்பாங்க. நம்ம பயன்பாட்டுல டிஸ்ப்ளேக்கு வேலை அதிகம். அதாவது படம் பாக்குறது அப்படி இப்படினு நெறைல அதனால FHD டிஸ்ப்ளே பெஸ்ட்!
இதவிட அதிகமான டிஸ்ப்ளே வெரும் அழகூட்டுறதுக்கும் மக்களை போன் பக்கம் இழுக்குறதுக்கும் செய்யற விளம்பரங்கள்தான்!
சாம்சங் போன்கள்ல எனக்கு நெறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவங்களோட AMOLED டிஸ்ப்ளே ரொம்ப புடிக்கும்.
கலர்ஸ்லாம் அவ்ளோ அழகா வெளிக்காட்டும்.
பின்குறிப்பு: டிஸ்ப்ளே பிக்சல் அதிகமாக அதிகமாக பேட்டரிய அதிகமா யூஸ் பன்னும்!
Camera:
நவீன ஸ்மார்ட்போன்ல மக்கள்ட்ட போன விக்கிறதுத்கு கம்பெனிக்காரனுங்க அதிகம் கவனம் செலுத்துறது இதுலதான்.
AI கேமரா, போர்ட்ரைட் மோட், டூயல் கேமரா, பியூட்டி மோட்னு
கேமராவுக்கு கம்பெனிக்காரனுங்க தனி டீமே வச்சி வேலை பார்ப்பானுங்க.
முதல் ஏமாத்து வேலை பிக்சல் அதிகமா இருந்தா கேமரா க்வாலிட்டி நல்லா இருக்கும்ன்றதுதான்.
Vivo, Oppo இன்னைக்கு இவ்ளோ பெரிய கம்பெனியா வளர்ந்திருக்குனா அதுக்கு அவனுங்க கேமராவுக்கு கொடுத்த முக்கியத்தும்தான்!
முதல்ல கேமரான்றதுக்கு லென்ஸ்தான் முக்கியகாரணம். லென்ஸ் சைஸ் பெருசா இருந்தா அதிகளவு ஒளிய எடுத்துக்கிட்டு நல்ல போட்டோஸ் கொடுக்கும். அதுக்குனு ஒரளவ தாண்டாயும் போய்ர கூடாது.
செகன்ட் சாப்ட்வேர். சாப்ட்வேர் எந்தளவுக்கு திறன் வாய்ந்ததா இருக்கோ அந்தளவுக்கு
சிம்பிளான கேமராவோட போட்டோஸ்கூட நல்லா எடுத்துக்காட்டும். இதுப்போன்ற உண்மைகள மறைத்து வெறும் பிக்சல் பிக்சல்னே பேசி கேமராவ குறிப்பிட்டு வியாபாரம் பாக்குறாங்க!
சமீப காலமா Aperture சைஸ்லாம் வெளிய சொல்ல ஆரம்பிச்சிருக்குறது வரவேற்க்கதக்கது! அதாங்க லென்ஸ் சைஸ்!!!
HDR மோட் இந்த மோட் கேமராக்கள் நல்ல இமேஜ் தரும்.
HDRன்றது ஒரு குறிப்பிட்ட போட்டோவ இருட்டாகவும் வெளிச்சமாகவும் எடுத்து அதசேர்த்து ஒரே போட்டோவாக தரும்.
இப்ப இருக்க பெஸ்ட் போன் கேமரானா எல்லாரும் ஆப்பிள் X சொல்லுவாங்க ஆனா அதுக்கே போட்டி போடுற அளவுக்கு தரமானது Pixel XL2!
ஆப்பிள் X டூயல் கேமரா பர்பாமன்ஸ பிக்சல் XL2 ஒரே கேமராவுல டீல் பன்னும்!
இதுல இருந்தே டூயல் கேமரான்றதுலாம் ஆடம்பரம், கவர்ச்சி பொருள்னு புரிஞ்சிக்கோங்க மக்களே!
நல்ல சாப்ட்வேர் மீடியமான கேமரா இருந்தா போதும் குவாலிட்டியான போட்டோஸ் கிடைக்கும்!
இதுல ஹானர் P20 3கேமரா வச்ச போன் விட்டான்றதுலாம் எதுலயாவது சிரினுதான் சொல்லனும்.
இங்க ஒரு சிலருக்கு போர்ட்ரைட் டூயல் கேமரா இல்லனா வராதானே சந்தேகம் இருக்கும். அவங்களாம் பிக்சல் XL2 போர்ட்ரைட் மோட் போட்டோஸ் பாத்துட்டு வந்து படிக்க தொடங்குங்க!!!
Redmi Note5,4,3 ல இந்த த்ரெட் படிக்குறவங்க சந்தோஷப்படுத்துற இடம் இது;
அடுத்த வர இருக்க ரெட்மி சாப்ட்வேர் அப்டேட்ல அட அதான்பா MIUI10 அதுல சிங்கிள் கேமராவுல போர்ட்ரைட் வருது.
டூயல் கேமரா ஆடம்பரம் விளம்பரம்னு எடுத்து சொல்ல இதவிட வேற பாய்ன்ட் இல்ல!!!
கேமரா பத்தி பேசுனா இந்த த்ரெட் பத்தாது அதனால இதோட நிறுத்திக்கிறேன்!
Storage:
அதான்பா அந்த 32GB, 64GB, 128GB இன்பிள்ட் ஸ்ட்டோரேஜ்!
ஆப்பிள், பிக்சல், ஒன்ப்ளஸ் இவனுங்களாம் SD Card போடுற ஆப்சன் தரதில்ல! நம்ம எளிய தமிழ்ல மெமரி கார்ட்!!!
இது ஏன்னு காரணம் கேட்டா மெமரி கார்ட்னால வைரஸ் ஏறுது அடிக்கடி ரிமூவ் பன்னி போட்றது சாப்ட்வேர் போறதுக்கு காரணமா இருக்குன்றானுவ!
இது உண்மைதான்! ஆனா ஒரு போனோட பர்பாமென்ஸ் நல்லா இருக்கனும்னா அதுக்கு மெமரி கார்ட் தனியா யூஸ் பன்றதும் அவசியம்தான்!
மெமரி கார்ட் தனியா யூஸ் பன்னி அதுல நம்ம பைல்ஸ் வைக்கிறதுனால ஓஎஸ் போடும்போதோ இல்லனா ரீசெட் பன்னும்போதோ டேட்டாலாம் போறத தவிர்க்கலாம்!
அதுமட்டும் இல்லாம ஒரு மொபைலோட இன்பிள்ட் ஸ்டோரேஜ் எவ்ளோ எவ்ளோ காலியா இருக்கோ அவ்ளோ வேகமா இருக்கும் பர்பாமன்ஸ்!
அப்படியே கொஞ்சம் RAM இருக்கனும்றதையும் மறந்துடாதீங்க பாஸ்!
இந்த மெமரி கார்ட் ஸ்லாட் கொடுக்காம இன்பிள்ட் மட்டும் கொடுக்குறது மக்கள்ட்ட கத்திய காட்டாம வழிப்பறி பன்றதுக்கும்தான் நண்பா!
ஆரம்பத்துல சொன்னா மாதிரி அடிக்கடி மெமரி கார்ட் கழட்டுறது. வைரஸ் இருக்குற போட்றதுனு இருந்தா
நம்ம தலையெழுத்த யாராலயும் மாத்த முடியாது!
Software:
இது நெறைய பேர்க்கு தெரியாத ஒரு விஷயம்! இங்கதான் பல கம்பெனிகளோட தனிச்சிறப்பே அடங்கி இருக்கு;
ஆப்பிள் போன்ஸ் ஏன் இவ்ளோ பெரிய கம்பெனியா இருக்குனு நாம யோசிச்சா கேமரா க்வாலிட்டி நல்லாருக்கும், ஹேங் ஆகாது இப்படி அப்படினுவோம்;
இதுக்கெல்லாம் மூலகாரணம் அவனுங்களோட சாப்ட்வேர்தான். அதுக்கு பேர் இல்லயானு கேக்குறது எனக்கு கேக்குதுங்க, iOS!
ஆன்ட்ராய்ட், ஆப்பிள் சாப்ட்வேர்க்கும் இருக்குற பண்புகளை தெரிஞ்சிக்கனும் நாம முதல்ல! அப்பறம்தான் நாம ஏன் ஆப்பிள் இவ்ளோ பெரிய இடத்துல இருக்குனு தெரிஞ்சிக்க முடியும்.
ஆப்பிள் iOS கம்பெனிகாரனோட முழுக்கட்டுப்பாட்டுல இருக்குறதும்,
ஆன்ட்ராய்ட் OS Open source அதாவது யாரு வேணாலும் எடுத்து தங்களுக்கு தேவையான மாதிரி வடிவமைச்சிக்கிலாம்னு இருக்குறதும்தான் முதல் மற்றும் முக்கிய காரணம்!
இரண்டு OSக்கும் இருக்க வித்தியாசங்களுக்கு நேர் இல்லனா மறைமுக
காரணம் இதாதான் இருக்கும்!
iOS பயன்பாடு தமிழ் சந்துலயும் தமிழகத்துலயும் குறைவுதான். நாம லைட்ட ஆன்ட்ராய்ட் பக்கம் திருப்புவோம்!
Oxygen OS – OnePlus
MIUI – Mi
EMUI – Honor
Funtouch OS – Vivo
Colour OS – Oppo
Samsung – TouchWiz
அப்படினு தங்களுக்கு தேவையான மாற்றங்கள செஞ்சு
தங்களோட மார்க்கெட்ட பெருசாக்கிகுறதுல குறியா இருக்கானுங்க.
என்னடா இதுல தமிழே (ஆன்ட்ராய்ட்) வரலயேனு நினைக்காதீங்க.
ஒரிஜினலா மாற்றம் ஏதும் செய்யாத ஆன்ட்ராய்ட் கிடைக்காதுனு கேக்குறீங்கனு புரியுது
Pixel phones
Nexus Phones
Android One Phones
இதுலதான் கிடைக்கும்!
அதாவது புதுசா வர ஆன்ட்ராய்ட் அப்டேட் சீக்கிரமா இதுங்கள்லதான் வரும்.
இதக்கடுத்துதான் அந்தந்த கம்பெனிகாரன் அவன் டெவலப்பர்ங்கள வச்சி டெவலப் பன்னி அவனோட ஸ்கின் போட்டு தருவான்.
ஒரிஜினல் ஆன்ட்ராய்ட் OSஅ Stock Androidனு சொல்லுவோம். இது மத்த கம்பெனி ஆன்ட்ராய்ட் ஸ்கின் விட லேசானது
நம்ம பாஷைல சொன்னா MB கம்மியா இருக்கும்ங்கோ!
மத்த கம்பெனி ஆன்ட்ராய்ட் ஸ்கின்கூட கம்பேர் பன்னும்போது இது பார்ஸ்டா இருக்க வாய்ப்பு ரொம்ப அதிகம். அதனாலதான் Stock Android இன்னும் உயிரோட இருக்கு.
அப்போ நீங்க Stock Androidதான் நல்ல போன்னு சொல்றீங்களானு கேக்குறீங்கனு தெரிது…
அதான் இல்ல மக்களுக்கு அன்றாட தேவைப்படுற ஒருசில பீச்சர்ஸ் அதுல இருக்காது!
அதாவது சொல்லனும்னா நம்ம மக்கள் டெய்லி யூஸ் பன்ற
Long Screen shot
AppLock
Dual Apps (2 WhatsApp in Single Mobile)
Themes
இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் Stock Androidல இருக்காது!
Stock Androidலயே எல்லாம் இருந்துட்டா மத்த கம்பெனிகாரன்லாம் எப்படி பொழைக்குறது.
எல்லாமே உள்குத்துதான்!
சாப்ட்வேர் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு அதிகமா யூஸ் ஆகுற பீச்சர்ஸ் எந்த கம்பெனிகாரன் ஓஎஸ்ல இருக்குனு தெரிஞ்சு வாங்குனா கிட்னிக்கு நல்லதுங்க!
அதுலயும் இந்த MIUI நம்ம ஆப்பிள் iOSக்கே விபூதி அடிப்பான்.
Battery:
கடைசியாதான் வந்தாரு விநாயக் மகாதேவ்ன்ற மாதிரி முக்கியமான விஷயமே இதாங்க!
நாம நெறைய பேர் பாக்குற ஆப்சனும் இதான். ஏன்னா பேட்டரி இல்லனா வாட்சாப்புல ஸ்டேட்டஸ் வைக்க முடியாதே பாஸ்!
3000mAh பேட்டரி ஒருநாள் புல்லா யூஸ் பன்றவனும் இருக்கான்! 5000mAh பேட்டரிய அரநாள்ல காலி ஆக்குறவனும் இருக்கான்!!
நம்மலோட யூசேஜ் தெரிஞ்சு அதுக்கேத்த பேட்டரி அளவு இருக்கானு பார்த்து வாங்குறதுதான் பாடிக்கு நல்லது!
ஏன்னா கொஞ்ச நேரம் போன் ஆஃப் ஆகிருச்சினா நம்மலயே டெட்பாடின்றுவானுங்க
கேமிங் அப்பறம் கால் பேசுறது அதிகமான பேட்டரி எடுக்கும். நீங்கள்லாம் அதிகமான பேட்டரி போன்கள் வாங்குறது நல்லது!
மத்த எல்லா பயன்பாடுகளும் இதவிட குறைவாதான் பேட்டரி எடுக்கும் அதுக்கேத்தாப்ல வாங்கிக்கலாம்.
பேட்டரி அதிகமா இருக்குற போன்கள் பெரும்பாலும் மெலிசா இருக்காது.
மெலிசான லுக் கேக்குறவங்களுக்கு இது கொஞ்சம் அசவுகரியம்தான்.
Gaming:
அதிகமா கேம் விளையாட்றவங்க GPUனு மென்சன் பன்னிருக்க பீச்சர பார்க்க தவறாதீங்க.
Andreno, Mali போன்ற GPUலாம் அதிகமா பயன்படுது மொபைல்ல. இதுங்களோட வேலையே வெறும் கேமிங் சமயத்துல ப்ரேம் ரென்ட்ர் பன்னி தரது
பர்பாமென்ஸ் அதிகப்படுத்துறதுதான்.
கேம் அதிகமா விளையாட்றவங்க கூலிங் சிஸ்டம்னு ஒன்னு இருக்கானு பாருங்க, கேம் விளையாடும்போது மொபைல் அதிக சூடாகிருச்சினா அது வெப்பத்தை குறைக்கும்.