3ஆம் எண்
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இயல்பாகவே அமைதியான குணம்,பொறுமை,அடக்கம் கொண்டவர்களாக காணபடுவர்.சமாதானமாக போக கூடியவர்கள்.யாருடைய வம்பு தும்புக்கு செல்லாதவர்கள்.தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக் கூடியவர்கள்.பெரியோர்கள் சொல்படி கேட்டு நடக்கக் கூடியவர்கள்.பொதுவாக இவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பர் .பழைய பழக்க வழக்கங்கள்,கொள்கைகள் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவராக இருப்பர்.நாகரிக மாற்றங்களை எளிதில் ஏற்க கூடியவர் அல்ல.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள்.இவர்கள் கல்வியில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்களாகவும் மற்றவைகளில் ஈடுபாடு குறைவாகவும் இருக்கும்.இவர்கள் ஆசிரியர்களாகவும்,பேராசிரியர்களாகவும் பணியாற்றினால் இவர்கள் வாழ்க்கை மேன்மையாக இருக்கும்.இந்த எண்ணில் பிறந்த குழந்தைகள் வகுப்பில் முதன்மையானவராக காணபடுவர். இவர்கள் கூர்மையான அறிவுடையவராக திகழ்வர்.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் நிர்வாகத் துறையில் கை தேர்ந்தவர்களாக காணப்படுவார்கள்.தனது காரியத்தை சாதிக்க பொறுமையை கடைபிடிக்கும் வல்லமை கொண்டவர்கள். இவர்கள் மிகவும் ரோஷகாரர்களாக இருப்பர்.இவர்கள் சட்டென்று கோபப்பட்டாலும் அந்த கோபமானது இவர்களிடத்தில் நெடு நேரம் நீடிக்காது.இவர்கள் நிர்வாக துறையில் சிறந்து விளங்குவதால் I.A.S துறையில் இருக்க வாய்ப்பு உள்ளன.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் நேர்மையுடன் காணப்படுவர். தன்னுடைய நேர்மைக்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொள்வர்.இவர்கள் எளிதில் யாரையும் நம்பக்கூடியவர்கள். இவர்கள் தங்கள் கொள்கையை யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சளி தொந்தரவு இருக்கும். 3 ஆம் எண் ஒருவரது பிறந்த தேதியில் ஒரு முறை மட்டுமே வருவது சிறப்பு. இல்லையேல் இவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் உத்தியோகம் என்று வரும் போது நிலையற்ற உத்தியோகம், நிம்மதி இல்லா வாழ்க்கை,தொழிலிலும் நிலையான இடம் இல்லாமை,குடும்பத்தில் ஈடுபாடு என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறைவாகவே காணப்படும்.
மொத்தத்தில் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பண்பாளர்களாகவும் யாரையும் உதாசீனம் செய்யாதவர்களாகவும்,பழகுவதற்கு இனிமை நிறைந்தவராகவும் காணப்படுவர்.இவர்கள் வாழ்க்கையில் படி படியாக உயரக்கூடியவர்கள்.
3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் 7ஆம் எண் 8 ஆம் எண் பிறந்தவர்களை திருமணம் செய்வதை தவிர்க்கவும்.
Whats app number-9092768787
(எண்களே நமது உலகம்)