1 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் தனித்தன்மை
1 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் தனித்தன்மை கொண்டவர்கள்.எந்த ஒரு விஷயத்தையும் தன்னிச்சையாக செய்ய கூடியவர்கள்.வாழ்கையில் பிரகாசமாக திகழகூடியவர்கள்.நேர்மையானவர்கள்,இவர்கள் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதை முடித்து காட்டாமல் ஓயமாட்டார்கள்.கம்பீரமாகவே வாழ விருப்பபடுவர்.வெற்றியை பெற்று தீர வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர்கள்.சிறப்பான நடை,உடை, போன்ற பாவனைகள் இவர்கள் தோற்றத்தில் காணப்படும். நிதானத்துடன் தான் எக்காரியத்திலும் இறங்குவார்கள். 1 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் அமைதியுடன் காணப்படுவார்கள்.இவர்கள் மற்றவர்கள் போல் அரட்டை அடிக்க கூடியவர் அல்ல.தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக கானபடுவார்கள்.இரண்டாம் நிலை என்று வந்தால் அவர்கள் மனம் ஏற்றுகொள்ள இடம் கொடுக்காது.துணிவுடன் முன்னேறி வெற்றி காண்பர்.1 ஆம் எண் உத்தரவிடகூடிய எண் என்பதால் இவர்கள் உத்தியோக காலத்தில் மற்றவர்கள் கிழ் வேலை செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த வேலையை செய்ய மாட்டார்கள்.இவர்களுக்கு பிறர் கிழ் வேலை செய்ய பிடிக்காது.
1 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தை(Disipline) கடைபிடிப்பவர்களாக காணப்படுவர்.இவர்கள் தான் இருக்கும் இடத்தை சுத்தமாக(Clean) வைத்திருக்க விரும்புவர்.இவர்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை என்றிருப்பர். 1 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் உயர்ந்த குணம் கொண்டவர்களாகவும்,ஒழுக்கத்தில் முதன்மையாகவும் இருப்பர்.
1 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சோம்பேறியாக இருக்க பிடிக்காது.சுறுசுறுப்புடன் காணப்படுவர்.இவர்களுக்கு உள்ளொன்று வைத்து வெளியொன்று பேச தெரியாது.மனதில் பட்டதை நறுக்கென்று உடனே சொல்லிவிடுவர். இவர்களுக்கு குறுக்கு மூளை இருக்காது.நேர்த்தியாக நேர்த்தியான மூளையாக(Broad mind) தான் இருக்கும்.
1 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி விடுவதால் பல விரோதிகளை சம்பாதித்து கொள்வார்கள்.இவர்களுடைய நட்பு மற்றும் விரோதம் போன்றவை வெளிப்படையாகவே இருக்கும்.இவர்கள் RESERVE TYPE கொண்டவர்களாகவும், துணிவுமிக்கவர்களாகவும் காணப்படுவர்.எந்த சூழ்நிலையிலும் தங்களை தாங்களே தாழ்த்தி கொள்ளாதவர்கள். இவர்கள் சிறந்த நிர்வாகியாக இருப்பர்.செய்நன்றியை மறவாதவர்கள்.மற்றவர்களை நம்பி வாழ்க்கை நடத்த விருப்பம் கொள்ளாதவர்கள்.
1 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் தனியாகதான் தொழில் செய்ய வேண்டும்.கூட்டுத் தொழில் இவர்களுக்கு சரிபட்டு வராது. சூரியன் எவ்வாறு கிரகங்களிலேயே தனித்தன்மையுடன் விளங்குகிறதோ இந்த எண்காரர்களும் எந்த ஊர்,எந்த நாடு சென்றாலும் அந்த இடத்திலும் தனித்தன்மையுடன் விளங்குவார்கள்.
1 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆகையால்கண்ணாடி அணிய நேரிடும்.பிறந்த தேதியிலும் விதி எண்ணிலும் 1ஆம் எண் இருந்தால் கண் பார்வை பாதிப்பினால் அறுவை சிகிச்சை செய்ய கூடிய சூழ்நிலை நேரிடும். 1 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் 7ஆம் எண்ணை திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
“ வாழ்க வளமுடன்”
அமோகா நியூமராலாஜி – 9092768787/9159768787