1-ம் எண் காரர்களின் பலன்கள்

1-ம் எண் காரர்களின் பலன்கள்

 

1,10,19,28, இந்த தேதிகளில் பிறந்த அனைவரும் 1ம் எண்காரர்களே!

1ம் எண்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் மாதமாக உள்ளது. உங்களின் பிறவி எண்ணே விதி என்ணாக வருவதால் இந்த மாதம் சிறப்பான மாதம். ஆண், பெண் இருபாலருக்குமே அன்பும், ஒற்றுமையும் நிலவும்.

மகன்கள் மூலம் சந்தோஷமும், மகள்கள் மூலம் சிற்சில சோதனைகளும் இருந்தாலும் இந்த மாதம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். 8.17.26ம் தேதி அன்று எந்த முயற்சி செய்ய வேண்டாம். அது நமக்கு நன்மை அளிக்காது.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். மன நிம்மதியுடன் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமின்றியும், லாபம் உங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்த இயலும்.வருமான உயர்வையும் இந்த மாதம் எதிர்பார்க்கலாம்.1ம் எண்காரர்களில் அரசாங்க வேலை எதிர்பாத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு தேடி வரும் மாதம்.

வியாபாரிகள்:

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வராக்கடன்கள் வரக்கூடிய மாதமாக உள்ளது. போட்டிகள் நீடித்தாலும் உங்கள் திறமையினாலும், கடின உழைப்பினாலும் அவை அனைத்தையும் சமாளித்து வியாபாரத்தை சிறப்பாக அபிவிருத்தி செய்வீர்கள்.

கலைத்துறையினர்:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திடீரென அதிர்ஷ்டம் வரும் மாதம் இது. உங்கள் அறிவும் ஆற்றலும் வெளிவரத்துவங்கி செல்வமும், புகழும் சேரும் காலமிது. சிறு முதலீட்டில் அளிக்கக் கூடிய மாதம்.

அரசியல்வாதிகள்:

அரசியல் துறையிலிருப்பவர்களுக்கு கடும் சோதனைகள் காத்திருக்கிறது. திடீரென பதவி பறிபோகும் சூழ்நிலையும் ஏற்படலாம். அரசியல் துறையில் இருப்பவர்கள் மௌனம் காப்பது நல்லது. 1,10,19,28 தேதிகளில் முக்கிய முடிவெடுத்தால் மகத்தான வெற்றியை நீங்கள் அடையலாம்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு இந்த மாதம் ஞாபகத்தின் சக்தி அதிகமாகும். படித்து கிரகித்துக் கொண்டதை, தேர்வில் திறமையாக எழுதும்படி மனம் படியும். உயர் கல்விக்கு உங்கள் விருப்பம்போல் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் மாதம் இந்த மாதம். அனுகூலமான மாதம். வெளிநாட்டில் கல்வி பயின்று முடித்த மாணவர்களுக்கு உடனே வேலை கிடைக்கும் அதிர்ஷ்டம் உள்ள மாதம் இது.

பெண்கள்:

குடும்பப் பொறுப்பில்  உள்ள பெண்மணிகளுக்கும் குடும்ப நிர்வாகத்தில் எந்தவித பிரச்சனையும் இருக்காது . வயிற்று வலி, ஒற்றைத்தலைவலி  அவ்வப்போது வந்துபோகும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு மனம் நிறைந்த வாழ்க்கையை தேட இந்த மாதம் உகந்தது.

ஆரோக்கியம்:

1,10,19,28ம் தேதியில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படும்.

பரிகாரம்:

திங்கள்கிழமைதோறும் சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டால் இந்த மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். புதன்கிழமை பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை அணிவித்து வந்தால் நல்ல பலன் கிடைகும்.