ஹோரைகளால் ஏற்படும் பலன்கள்…
சூரிய ஹோரை:
நன்மைகள் :
இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் . தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம்உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம்.
பத்திரங்கள் பார்க்கலாம்
சிவ தரிசனம் செய்யலாம் .
தீமைகள் :
சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சக்கூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது. ஒப்பந்தகளில் கையெழுத்திட கூடாது
சந்திர ஹோரை
நன்மைகள் :
புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கியில் கணக்குத் தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் சன்னிதானத்திற்குச் சென்று வழிபடலாம்.கண் சம்மந்தமாக மருத்துவரை சந்திக்கலாம். கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியைப் பெற அவரை நாடலாம்
தீமைகள் :
தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சம்மந்தமாக பேசக்கூடாது.
செவ்வாய் ஹோரை
நன்மைகள் :
சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். சகோதரர்கள், பங்காளிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் .
தீமைகள் :
கடன் வசூல் செய்யப் போகக்கூடாது.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களைத் தவிர்க்கவேண்டும் .
புதன் ஹோரை
நன்மைகள் :
கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம். ஜாதகம் பார்க்கலாம். கணக்கு வழக்குகள் பார்க்கலாம்.
வங்கியில் புதுக் கணக்கு தொடங்கலாம்.
மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம். வக்கீல்களைப் பார்க்கலாம் .
கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம். நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம்.
பெருமாள் தலங்களுக்குச் சென்று வணங்கலாம்.
தீமைகள் :
பெண்பார்க்கும் சம்பவம் கூடாது.
வீடு,நிலம் பற்றிப் பேச கூடாது.
சொத்துகளைப் பார்வையிடக்கூடாது.
குரு ஹோரை
நன்மைகள் :
சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை. பொன் நகைகள் வாங்கலாம்.
புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் . வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம்.
குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்.
முருகன் தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதைக் கேட்கலாம்.
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம். யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்கான பொருட்களை வாங்கலாம்.
தீமைகள் :
முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்கக் கூடாது.
புது மணத் தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யக்கூடாது.
சுக்கிர ஹோரை
நன்மைகள் :
பெண் பார்க்கும் சம்ப்ரதாயத்திற்கு மிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிப்படுத்தலாம். வெள்ளிப் பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து வைக்கலாம் வாகனம் வாங்கப் பணம் கட்டலாம். சொத்து விஷயங்களைப் பேசலாம். கணவன் மனைவியிடையே ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பகிர்ந்து பேசலாம். பெண்களின் உதவியை நாடலாம். பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம். அம்மன் தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.
தீமைகள் :
நகை இரவல் கொடுக்கக் கூடாது . குடும்பப் பிரச்சனைகளைப் பேசக் கூடாது. துக்கம் விசாரிக்ககூடாது.
சனி ஹோரை
நன்மைகள் :
சொத்து சம்மந்தமாகப் பேசலாம். இரும்பு சாமான்கள், பீரோ, வண்டி, ஆகியவை வாங்கலாம். மரக்கன்றுகள் நடலாம். நவக்கிரகப் பரிகாரப் பூஜைகள் செய்யலாம். வாங்கிய கடனை அடைக்கலாம். பிரசித்தி பெற்ற தலங்களுக்குச் செல்லலாம்.
தீமைகள் :
நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடக் கூடாது. மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்லக் கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடாது. முதல் முதலாகப் பிறந்த குழந்தையை போய்ப்பார்க்கக் கூடாது.
துக்கம் விசாரிக்கக் கூடாது.
தவிர்க்க வேண்டிய நேரங்களைத் தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களைச் செய்வதால் அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும் ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்லா விட்டாலும் அவை நல்ல விதமாகக் கூடி வரும்.