வெந்தய டீ பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா

வெந்தய டீ பருகினால் என்னென்ன   நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

 

 வீட்டின் சமையலறைகளில் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

அதாவது நீரை கொதிக்க வைத்து அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து 3 நிமிடம் கழித்து, அதை வடிகட்டி, தேன் கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையில் குடிக்கலாம்.

 

வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

 

  1. மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை குணமாக்கும் திறன் கொண்டது.
  2. தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
  3. உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, நம் உடம்பில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவும் குறையும்.
  4. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 1 டம்ளர் வெந்தய டீயை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  5. உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  6. கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி, குடல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  7. இதய நோயின் தாக்கம், விட்டமின் B1 குறைபாட்டினால் ஏற்படும் பெரிபெரி நோய் போன்ற பிரச்சனைகளின் தாக்கத்தை தடுக்கிறது.
  8. பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.
  9. தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலம், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும்.
  10. வெந்தய டீயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களையும் அதிகரிக்கும்.
  11. வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது.
  12. சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.
  13. வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும்.
  14. காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.
  15. வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.
  16. வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.