வீட்டில் வரக்கூடாத சில தவறான அமைப்புகள்

வீட்டில் வரக்கூடாத சில தவறான அமைப்புகள்

 

  1. மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள பெண்கள் கர்ப்பமாயிருக்கும் போது பணிகள் துவங்குதல்.
  2. மனையின் தென்மேற்கில்  நிலத்தடி நீர்த்தொட்டியும், வடகிழக்கில் தற்காலிகக் கொட்டகையும், வடக்கிலும், கிழக்கிலும் சாமான்கள் சேகரிப்பும் செய்து கொண்டு தென்மேற்கு பகுதியில்  முதலில் கடைகால் எடுத்துப் பணிகள் துவங்கல்.
  3. மனைக்கு மதில் சுவர் இல்லாதிருத்தல்.  
  4. தெற்கு, மேற்கு மதில் சுவர்கள், வடக்கு, கிழக்கு மதில் சுவர்களை விட உயரம் குறைவாக இருத்தல்.
  5. வடக்கு, கிழக்கு மதில் சுவர்கள் மேல் கம்பிவேலி அமைத்துக் கொடிகளைப் படரவிடல், வடக்கு, கிழக்கு மதில் சுவர்கள் மேல் தொட்டிகள் அமைத்தல்.
  6. மற்ற மனைகளை விட நமது மனையின் தெற்கு, மேற்கு மதில் சுவர்கள் தெருவை நெருங்கி இருத்தல்.
  7. மதில் வாயில்கள் நீச்சத்தில் அமைத்தல்.
  8. மதில்வாயில், தலைவாயில் மற்றும் இதர வாயில்களுக்கு நேர் எதிரில் கிணறு, ஆழ்துளைக்கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி, குழி, நீச்சல் குளம், கம்பம், தூண், மரம், மாடிப்படி, கழிப்பறை, அடுப்பு, குப்பைத்தொட்டி, பாழடைந்த வீடு, எதிர்வீட்டு மூலை ஆகியன இருத்தல்.
  9. மழை நீர் மனையின் வடகிழக்கு பகுதிக்கு செல்லாமல் தென்மேற்கு பகுதிக்குச் செல்லல்.
  10. கழிவு நீர் மனையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அல்லது தெற்கு, மேற்கு உச்சப் பகுதிகளில் வெளியேறாமல் மற்ற பகுதிகளில் வெறியேறல்.
  11. காலியிடம் தெற்கு, மேற்குப் பகுதிகளில் அதிகமாகவும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குறைவாகவும் இருத்தல்.