வீட்டில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான அமைப்புகள்

வீட்டில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான அமைப்புகள்

 

  1. மனையின் தெற்கு, தென்மேற்கு, மற்றும்  மேற்கு ஆகிய பகுதிகளில்  பள்ளங்கள் இருத்தல்.
  2. மனையின் வடக்கிலும், கிழக்கிலும் மேடுகள் இருத்தல்.
  3. மனையின் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள சாலைகள் மிக உயரமாயிருத்தல்.
  4. மனையின் தெற்கிலும், மேற்கிலும் உள்ள சாலைகள் மிகவும் தாழ்ந்திருத்தல்.
  5. சாலைகள் வடக்கிலிருந்து தெற்கிலும், கிழக்கிலிருந்து மேற்கிலும் அதிகச் சரிவு – அமைந்திருத்தல்.
  6. மனையின் நீச்சப்பகுதிகளில் தெருக்குத்தல்கள் இருத்தல்.
  7. மனை சதுரம் அல்லது செவ்வகமாக இல்லாமல் வேறு பல கோணங்களிலும், வடிவங்களிலும் இருத்தல்.
  8. மனையின் அகல நீளவிகிதம் 1:2 க்கு அதிகமாக இருத்தல்.
  9. இரண்டு பெரிய மனைகட்கு இடையே உள்ள சிறிய மனையை வாங்குதல்.
  10. மனையின் தென்மேற்கு மூலை, மூலைமட்டத்திற்கு இல்லாதிருத்தல்.
  11. மனையின் வடகிழக்கு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் வளர்ச்சி இருத்தல்.
  12. மனையின் வடகிழக்கு மற்றும்  தென்மேற்கு வெட்டுபட்ட அமைப்பு.