வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வருவதற்கு வாஸ்து தான் காரணமா

வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் வருவதற்கு வாஸ்து தான் காரணமா?

வாஸ்து என்பது நீண்ட ஆயுள், நிறைவான செல்வம் என்பதே. நீங்கள் குடியிருக்கும் வீடே உங்களது ஆரோக்கியத்தையும், வருமானத்தையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.

கிழக்கு பகுதி முழுவதும் அடைப்பட்ட வீட்டில் வரும் நோய்கள் : 

1. கண்பார்வை கோளாறு.

2. தைராய்டு பிரச்சனை.

3. வைட்டமின் பற்றாக்குறை.

4. மனநலம் தொடர்பான பிரச்சனைகள்.

5. இரத்த சோகை.

6. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு.

வடக்கு பகுதி முழுவதும் அடைப்படும் போது வரும் நோய்கள் : 

1. கோமா நிலை.

2. மனநல பாதிப்பு.

3. மூளை தொடர்பான அனைத்து விதமான நோய்களும் வருதல்.

4. பெராலிக்ஸ் அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள்.

தெற்கு பகுதியில் தவறு வரும் போது ஏற்படும் நோய்கள் :

1. பெண்களின் உடல் நலம் மட்டும் கெடும்.

2. கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள்.

3. இரத்த நாளங்கள் தொடர்பான அனைத்து விதமான நோய்களும் வருதல்.

4. ஆண், பெண் இருவருக்கும் சர்க்கரை வியாதி வருதல்.

5. கேன்சர் வருவது.

6. குடல் சம்பந்தமான அனைத்து விதமான நோய்களும் வருவது.

தென்மேற்கு பகுதியில் தவறான அமைப்பினால் ஏற்படும் நோய்கள் :

1. ஆண்களுக்கு, பெண்களுக்கு இருவருக்குமே கிட்னி தொடர்பான அனைத்து விதமான பிரச்சனைகளும் வருவது.

2. ஆண்களுக்கு ஹார்ட் தொடர்பான பிரச்சனைகள் வருவது.

3. பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் வருவது.

4. பித்தப்பை, கல்லீரல், கணையம், முதுகு தண்டுவடம், பாலின உறுப்புகளில் பிரச்சனை இவைகள் ஆண், பெண் இருவருக்கும் வர வாய்ப்புண்டு.

மேற்கு மற்றும் வடமேற்கு தவறினால் ஏற்படும் நோய்கள் : 

1. எலும்பு மஞ்சையில் பிரச்சனை வருவது.

2. முழங்கால் வலி.

3. மூட்டு அறுவை சிகிச்சை செய்வது.

4. கால்களில் அடிக்கடி முறிவு ஏற்படுவது.

5. கைகளில் அடிக்கடி முறிவு ஏற்படுவது.

6. கால் பாதங்களில் அடிக்கடி பிரச்சனை வருவது.

7. மன நலம் கெடுவது.

8. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள்.

9. கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விடுவது.

10. குழந்தை பாக்கியம் இல்லாம் போய் தத்து எடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுவது.

11. குழந்தை பாக்கியத்திற்காக டெஸ்டியூப் பேபி வரை சென்று தோல்வியில் முடிவது.

இங்கு குறிப்பிட்ட இத்தனை நோய் கூறுகள் உங்களது வீடு அமைப்பில் தவறு இருக்கும் பட்சத்தில், அந்த தவறான அமைப்புக்கு உண்டான நோய் உறுதியாக வரக்கூடும். P.M.கிருஷ்ண ராஜன், 82205-44911.