வீட்டின் தெற்கு, மேற்குத் திசைகளில் வரக்கூடிய நன்மை தரும் அமைப்புகள்

வீட்டின் தெற்கு, மேற்குத் திசைகளில் வரக்கூடிய நன்மை தரும் அமைப்புகள்

 

  1. வீட்டின் தெற்கு, மேற்குத் திசைகளில் உயரமான குன்றுகள் வருவது சிறப்பு.
  2. வீட்டின் தெற்கு, மேற்குத் திசைகளில் உயரமான சாலைகள் இருத்தல் நலம்.
  3. மேலும், மண் மேடுகள், சரளைக் கற்கள், குப்பைமேடுகள் போன்றவை தெற்கு, மேற்குத் திசைகளில் இருத்தல் நலம்.
  4. வீட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதி மனை உயரமாக இருக்கலாம்.
  5. வீட்டின் மதில் சுவர் தெற்கு, மேற்குத் திசைகளில் உயரமாக இருத்தல் நலம்.
  6. மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உயரமான விளம்பரப் பலகைகள் இருப்பது சிறப்பு.
  7. மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உயரமான கம்பங்கள் இருத்தல் நலம் மற்ற பகுதிகளில் வருவதை தவிர்க்கவும்.
  8. மேல் நிலைத் தொட்டி அமைப்பானது வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வருவது நல்லது.
  9. வீட்டில் மரங்கள் வளர்க்கும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளே உகந்தது.
  10. உயரமான கட்டிடங்கள் வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் இருத்தல் நலம்.
  11. வீட்டின் தெற்கு ,மேற்கு பகுதிகளில் காலியிடம் இருத்தல் கூடாது.மேலும் காலியிடம் இருக்கும் பட்சத்தில் கெடுதலான பலனையே ஏற்படுத்தும்.
  12. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மேடான அறைகள் போன்ற அமைப்புகள் இருத்தல் கூடாது.