விவசாய நிலத்தில் வாஸ்துப் படி வீடு கட்டுவது எப்படி?

விவசாய நிலமானாலும் சரி, வீட்டு நிலமானாலும் சரி தென்மேற்கில் வீட்டை அமைத்து விட்டு வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக இடம் விட வேண்டும். இதுதான் அடிப்படை விதி. ஆனால், 2000 சதுரடிக்கு மேல் காலியிடம் வரும் போது தான் பிரச்சனைகளே ஆரம்பிக்கும்.

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

1. 50 சென்ட் முதல் 5 ஏக்கர், 10 ஏக்கர் உள்ள இடங்களில் இதுபோல வீடு அமைப்பது எப்படி?

2. இதுபோல் பரப்பளவு அதிகம் உள்ள இடங்களில் ரோட்டுக்கான இடம் அவ்வளவு உபயோகம் இல்லாமல் வீணாகிவிடுமே?

3. இதுபோல் பெரிய இடத்தில் ரோடு அமைப்பு எங்கு வரவேண்டும்?

4. இதுபோன்ற இடங்களில் போர்வெல் அமைக்கும் போது வீட்டிற்கு ஈசான்யத்தில் (வடகிழக்கில்) வரவேண்டுமா? அல்லது மொத்த இடத்திலே வடகிழக்கில் வரவேண்டுமா? வீட்டிற்கு ஈசான்யம் என்றால் மொத்த இடத்திற்கும் தென்மேற்கில் அல்ல வரும், அது தவறு அல்லவா?

5. வீட்டிற்கு மட்டும் வடகிழக்கில் மரங்கள் இருக்கக் கூடாதா? அல்லது மொத்த இடத்திலும் மரங்கள் இருக்கக் கூடாதா?

6. பூமியுடைய சரிவு என்பது மொத்த இடத்திற்கு பார்க்க வேண்டுமா? அல்லது வீட்டிற்கு மட்டும் பார்க்க வேண்டுமா?

7. மொத்த பூமியில் பாதி சொத்து அப்பா பெயரில், பாதி சொத்து அம்மா பெயரில் உள்ளது நான் எங்கு வீடு கட்டுவது?

8. இதுபோல் இருவேறு பெயருடைய சொத்தில் உள்ள கிணறுகள் எங்கு வரவேண்டும்?

பதில் :

நண்பர்களே உங்களுக்கான இடம் 1000 சதுரடி முதல் 1 லட்சம் சதுரடி கூட இருக்கட்டும் பரவாயில்லை. ஆனால், நீங்கள் வீடு கட்டுவதற்காக எடுத்துக்கொண்ட இடமானது 30ழூ40 அல்லது 40ழூ40 அல்லது 50ழூ60. இந்த இடம் மட்டுமே உங்களுடைய வீட்டிற்கான இடம். 
மொத்த இடமும் உங்களுடைய பெயரிலேயே இருந்தாலும் அது உங்களுக்கு எந்த ஒரு கெடுதலும் தராது.
அந்த வீட்டிற்குண்டான இடத்தில் வீடு கட்டும்போது மட்டுமே நான் கூறும் அடிப்படை விதிகளை அனுசரித்து கட்ட வேண்டுமே தவிர மொத்த இடத்தை பார்ப்பது இன்றைய காலத்திற்கு ஒவ்வாத விஷயங்கள்.