விருட்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்?
முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், எனது சொந்த லக்னப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்? என்று கேட்பவர்களுக்காக நான் லக்ன அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு…
செவ்வாயை ராசி அதிபதியாகவும், சூரியனை 10 ஆம் அதிபதியாகவும் கொண்டு விளங்கும் விருச்சிக லக்ன அன்பர்களே!
நீங்கள் ரியல் எஸ்டேட், வீடு (அல்லது வீட்டின் மூலம் வாடகை ),
நிலம்,
விவசாயம்,
தீயணைப்புத் துறை ,
ராணுவம்,
சர்க்கஸ் அல்லது வேறு ஏதேனும் சாகச தொழில் (சிலம்பம், குத்துச் சண்டை போன்றவைகள்),
தோப்புகள் மூலம் வருமானம் பெறுதல்,
மின் வாரியங்கள்,
சமையல் தொழில் (அல்லது நெருப்பின் மூலம் பிழைக்கும் தொழில்கள் – காஸ், எரிபொருள் விற்பனைகள்),
பயங்கர கருவிகளை தயார் செய்யும் தொழிற்சாலைகள், பொறியியல்,
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் அல்லது நிபுணர் (இது போல ரத்தம் பார்க்கும் வேறு தொழில்கள் அதாவது ஆய்வுகூடத்தில் பரிசோதகர் போன்றவைகளை சொல்கிறேன் ),
அரசியல் சம்மந்தமான துறை,
அரசுத் துறை,
சிவப்பு வண்ண கற்களை விற்கும் தொழில்,
பூண்டு அல்லது வெங்காய வியாபாரம்,
காகிதம்,
தாவரப் பொருள்கள் வியாபாரம்,
புகையிலை, சிகரெட் வியாபாரம்,
போன்ற ஏதேனும் ஒரு தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்.