விபத்து ஏற்படுவதற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் தொடர்பு உண்டா

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911

விபத்து ஏற்படுவதற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் தொடர்பு உண்டா?

 நம்முடைய வீடு, தொழிற்சாலை, அலுவலகங்கள், பொது ஸ்தாபனங்கள் போன்றவற்றில் தினந்தோறும் விபத்துகள் எங்கோ ஒரு பக்கம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதுபோல விபத்துகள் ஏற்பட வாஸ்து குறைபாடுகள் ஒரு காரணமா என்பது பற்றி அறிவோம்.

 இடுப்பு பகுதியில் விபத்து ஏற்படுதல், தற்கொலை எண்ணம், கணவன், மனைவிக்குள் தீராத சண்டை, போதை பழக்கம், வாகன விபத்தில் சிக்கிக் கொள்ளுதல் போன்ற பல காரணங்களுக்கு அவர்களின் குடியிருக்கும் அமைப்பும், பள்ளம், மேடு போன்ற அமைப்புகளால் இதுபோன்ற பலபல பிரச்சனைகள் வரவாய்ப்புண்டு.

 தீவிபத்து, திருட்டு, கோர்ட் கேஸ், ஜெயில் வயிற்றுப்பகுதி விபத்தால் அறுவை சிகிச்சை இதுபோன்ற காரணங்களுக்கு அவர்கள் வசிக்கும் வீட்டின் தென்கிழக்கு பகுதியின் ஒருசில தெருகுத்து, தெருபார்வை, மேடு, பள்ளம் மற்றும் மூடிய அமைப்புகளுமே காரணம் ஆகும்.

 அடிக்கடி தலைப்பகுதிகளில் விபத்து ஏற்படுதல், மதுவுக்கு தொடர்ந்து அடிமையாகுதல், கொலை வழக்கு, திருட்டு வழக்கு போன்றவற்றில் சிக்கிக்கொள்ளுதல் மற்றும் மனநலம் கெட்டுப்போகுதல், கோமா நிலைக்கு போகுதல் இதுபோல பல காரணங்களுக்கு வடகிழக்கு பகுதியில் சில மூடிய அமைப்புகளும், உயரமான கட்டிட அமைப்புகள், எடை அதிகமான கட்டிட அமைப்புகளும் ஒரு காரணம் ஆகும். 

 அடிக்கடி கண்கள் பகுதியில் விபத்து ஏற்பட்டு கால் முறிவு, கை முறிவு போன்றவைகளும் மனநலம், கண்பார்வை, காது கேட்கும் திறன் கெட்டுப்போகுதல். இதுபோல இன்னும் சில விபத்துகளுக்கு வடமேற்கு பகுதியில் உயரம், பள்ளம் சில மூடிய அமைப்புகள் இருப்பதால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. 

 நீங்கள் உருவாக்கிய ஒவ்வொரு கட்டிட அமைப்புகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. ஏற்கனவே உருவாக்கிய அமைப்பும் சரி இனி உருவாக்கும் அமைப்பும் சரி மிக சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைத்துக் கொள்வது நல்லது.