விசாக நட்சத்திர குணாதிசியங்கள் !!
விசாகம் :
விசாக நட்சத்திரத்தின் இராசி : துலாம், விருச்சிகம்
விசாக நட்சத்திரத்தின் அதிபதி : குரு
விசாக நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன்
விசாக நட்சத்திரம் நான்காம் பாதத்தின் இராசி அதிபதி (விருச்சிகம்) : செவ்வாய்
பொதுவான குணங்கள் :
- ஞானம் உடையவர்கள்.
- இறை நம்பிக்கை உள்ளவர்கள்.
- கடமையுணர்வு கொண்டவர்கள்.
- சொகுசு வாழ்க்கை வாழ பிரியம் உடையவர்கள்.
- பணம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
- உணவில் விருப்பம் உடையவர்கள்.
- பிற உயிர்களை நேசிப்பவர்கள்.
- வாக்குத்திறமை கொண்டவர்கள்.
- உறக்கத்தில் விருப்பம் உடையவர்கள்.
- அடக்கமான குணம் உடையவர்கள்.
- நிதானமானவர்கள்.
- பொருட்சேர்க்கை உடையவர்கள்.
- புராண கதைகளில் வல்லவர்கள்.
- வலுவான தேகம் கொண்டவர்கள்.
- தியாக குணத்தை உடையவர்கள்.
- வியாபாரத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
- சாமர்த்தியமான செயல்பாடுகளை உடையவர்கள்.
- சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
விசாகம் முதல் பாதம் :
இவர்களிடம் விசாக நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- பொருட்செல்வம் மற்றும் உறவினர்களின் அன்பை கொண்டவர்கள்.
- எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.
- தம் வேலைகளை தாமே செய்யக்கூடியவர்கள்.
- வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்.
- மறை (வேதம்) கலைகளை அறிந்தவர்கள்.
- சிறந்த வியாபாரிகள்.
விசாகம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் விசாக நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- தற்புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.
- மாயஜால கலைகளை அறிந்தவர்கள்.
- உண்மை பேசக்கூடியவர்கள்.
- மகிழ்ச்சியாக இருப்பவர்கள்.
- சுயநலம் கொண்டவர்கள்.
- வாழ்க்கையை ரசித்து வாழக்கூடியவர்கள்.
- நல்ல சிந்தனையாளர்கள்.
- கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.
விசாகம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் விசாக நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- உடல் வலிமை கொண்டவர்கள்.
- பலவற்றை கற்றவர்கள்.
- கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.
- திட்டமிட்டு வாழக்கூடியவர்கள்.
- எளிதில் மற்றவர்களை நம்பமாட்டார்கள்.
- உயர் பதவிகளை வகிப்பார்கள்.
- புகழுடன் வாழக்கூடியவர்கள்.
விசாகம் நான்காம் பாதம் :
இவர்களிடம் விசாக நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- செல்வ வளம் உடையவர்கள்.
- எதன் மீதும் பற்று இல்லாதவர்கள்.
- தாராளமாக செலவு செய்வார்கள்.
- குடும்பத்தின் மீது அன்பு கொண்டவர்கள்.
- கௌரவமான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள்.
- பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.
- சேவைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.
- புகழை விரும்புபவர்கள்.