வாஸ்து முறையிலான சமையல் அறையும், உடல் ஆரோக்கியமும்

வாஸ்து முறையிலான சமையல் அறையும், உடல் ஆரோக்கியமும்

 

நாம் வாழ்வதற்கு மிகவும் அடிப்படையான , அத்தியாவசியமான ஒன்று என்றால், அனைவரது நினைவுக்கும் வருவது உணவு. அப்படிப்பட்ட உணவைத் தயாரிக்கும் இடம், அதாவது சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்துப் பெண்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. அதிலும் புதிய வீடு கட்டும்போது கண்டிப்பாக இருக்கும்.

 

வாஸ்துபடி சமையலறை

ஆனால் வாஸ்துப்படி எப்படி இருக்க வேண்டும்? ஏன் அப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு பதில் இதோ. ஒரு வீட்டின் சமையலறை கண்டிப்பாக அந்த வீட்டின் தென்கிழக்குப் பகுதியில் தான் அமைக்கப்பட வேண்டும். வாஸ்துபடி சமையலுக்கு தேவையான நெருப்புக்கு உகந்த இடம் தென்கிழக்கு ஆகையால் அங்குதான் சமையலறை இருக்க வேண்டும்.

 

அறிவியல்படி சமையலறை

 

சமையலறையில் கிழக்குப் பகுதியில் இருந்து சூரிய ஒளி உள்ளே வரும் பட்சத்தில் அதாவது நல்ல வெளிச்சம் நிறைந்த பகுதியாக இருந்தால் நாம் சமைக்கும் பாத்திரத்தில், நமது கண்ணுக்குத் தெரியாமல் கூட தூசு போன்ற எதுவுமே கலந்து விடா வண்ணம் பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் கூறலாம்.

சூரிய ஒளி உள்ளே வந்தால் சமையலறையில் உள்ள உணவு பொருட்கள் நீண்ட நாள் நன்றாக இருக்கும்.

நாம் சமைக்கும் போது கிழக்கு பார்த்து மட்டுமே சமைக்க வேண்டும். அப்படி சமைக்கும்போது, பாத்திரத்தை திறந்து வைத்து சமைத்தால் சூரிய ஒளி, நல்ல காற்று போன்றவை சமையலில் கலந்து உணவின் ருசியைக் கூட்டும்.

 

உங்கள் கவனத்திற்கு :

ஒருசில இடங்களில் வடமேற்குப் பகுதியில் சமையலறை அமைக்கின்றனர். வடமேற்கு சமையலறை ஒருவகை பாதிப்புகளை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம். தென்கிழக்குச் சமையலறையைத் தவிர வேறு திசையில் சமையலறையை மாற்றி அமைத்தாலும் அது அதற்குண்டான பாதிப்புகளை உண்டு பண்ணும், அன்பு நண்பர்களே கவனம்! அதேபோல் பிரஷர் குக்கர் பயன்பாடு நேரத்தை மிச்சப்படுத்தினாலும், ஆரோக்கியமான சாப்பாடு என்பது நாம் ஆச்சி (பாட்டி ) காலத்து முறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.  82205-44911