வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911
வாஸ்து பலன் வீட்டு உரிமையாளருக்கா? அல்லது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவருக்கா?
வாஸ்துப்படி வீடுகள் கட்டுவது நற்பலனை தரும். எந்த இடத்தில் வீட்டிற்கு அடிதளம் போடுவது, என்பதை வாஸ்து பார்த்து போடுகிறோம். அதுபோல வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள், பூஜை அறை, படுக்கை அறை எப்படி அமைய வேண்டும் என்பதை வாஸ்துப்படி கட்டினால் மேலும் சிறப்பு பெரும்.
வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து பலன் வீட்டு உரிமையாளருக்கா? அல்லது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவருக்கா? என்பது பற்றி பார்ப்போம்.
நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இரண்டு, மூன்று, நான்கு, ஆறு சக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தக்கூடிய வாகனம் அதாவது நாம் பயணம் செய்யக்கூடிய வாகனம், சொந்தமானதாகவும் இருக்கலாம், வாடகை வாகனமாகவும் இருக்கலாம், அல்லது அரசாங்க வாகனங்களாகக் கூட இருக்கலாம்.
நாம் பயணம் செய்யக்கூடிய வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களை மட்டுமே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.
1. நல்ல ஓட்டுநரா?
2. பிரேக் பிடிப்பதற்கு இருக்கா?
3. சீட் பெல்ட் இருக்கா?
4. ஏர்பேக் இருக்கா?
5. எவ்வளவு வேகம் போனாலும் பயம் இல்லாமல் இருக்க முடியுமா?
இதுபோல இன்னும் பல அம்சங்களை பார்த்துதான் நாம் பயன்படுத்துகிறோம்.
இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும், ஏதாவது ஆபத்து ஏற்படுமானால், அதில் பயணம் செய்தவர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த வண்டியை தயாரித்தவர் மீதோ, விற்பனை செய்தவர் மீதோ, வாகனத்தின் உரிமையாளர் மீதோ, ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிறதா? இல்லை, ஒருபோதும் அதுபோல் நடப்பதில்லை. அந்த வாகனத்தில் பயணம் செய்த அத்தனை பேர் மீது மட்டுமே பாதிப்புகள் ஏற்படுகிறது.
அதேபோல் தான் வீட்டு உரிமையாளர் யாரோ வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த பூமி, இடம் யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த கட்டிடத்தை எந்த இன்ஜினியர் வேண்டுமானாலும் கட்டி முடித்திருக்கட்டும். அதைப்பற்றி வாஸ்துவுக்கு எந்த கவலையும் கிடையாது.
அந்த இடத்தைப் பொருத்தவரை அதில் யார் குடியிருக்கிறார்களோ அவர்கள்மீது மட்டுமே நல்ல பலனோ அல்லது தீய பலனையோ கொடுக்கவல்லது.