வாஸ்து தவறினால் மனநலம் கெடுமா?
நீண்ட ஆயுள் பெற
இந்த பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஐந்து அறிவை பெற்றுள்ளது. மனிதன் மட்டும் ஆறாவது அறிவான மனம் என்கின்ற அதிசயத்தை பெற்றுள்ளான். அதனால் தான் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அடக்கி ஆளும் திறமையை பெற்றுள்ளான். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மனதை கையாளும் முறையை தெரிந்த மனிதர்கள் இந்த பூமியில் மிக மிக பலசாலியாகவும், கோடிஸ்வரர்களாகவும், பிரபலமானவர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும் திகழ்கின்றனர்.
அதே இந்த மனதை சரியாக கையாள தெரியாதவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும், நோயாளிகளாகவும், கடன்காரர்களாகவும், பயந்த சுபாவத்துடனும் வாழ்கிறார்கள்.
அறிவியல் வளர்ச்சியால் இன்று மனோவியல் படிப்புகள் வந்து விட்டதால் எவர் வேண்டுமானாலும் இந்த மனோவியல் படிப்பை படித்து தான் நிலையை உணர்ந்து கொள்ள முடியும்.
மனப் பிரச்சனைகளும் வாஸ்துவும்
எனது அனுபவத்தில் ஒருவர் குடியிருக்கும் வீட்டில் சில குறிப்பிட்ட இடங்கள் சரியான அமைப்பு இருந்தால் அவர்கள் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதில்லை. ஒருநபர் மனதால் பாதிக்கப்படுகிறார் என்றால் அவருடைய வீடே முதல் காரணம் என்று கூறுலாம்.
வீட்டு அமைப்புகள்
1. வடகிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு
2. கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு
3. வடமேற்கில் தாழ்வான தளம் (low ceeling) உள்ள அமைப்பு
4. வடமேற்கு வெட்டப்பட்டு வட மேற்கு அதிகப்படியான வளர்ச்சி
5.வடமேற்க்கில் உயரமான தளம் (High ceeling) உள்ள அமைப்பு,
6. வடகிழக்கு சன்னல் இருந்தும் திறந்து வைக்காமல் இருப்பது,
இது போல இன்னும் சில அமைப்புகள் வரும் பட்சத்தில் மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அந்த வீட்டில் உள்ள ஆண், பெண் இருவருக்கும் வருவதற்கான வாய்ப்பு உண்டு .