வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911
வாஸ்து தவறால் கிட்னி பிரச்சனை வருமா?
கிட்னி பிரச்சனையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவர்களுடைய வீட்டு அமைப்பு வாஸ்துப்படி எப்படி இருந்திருக்கும். நான் இங்கு குறிப்பிடக்கூடிய அமைப்பு ஏற்கனவே கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பல நூறு வீடுகளை ஆராய்ந்ததில் வந்த முடிவு. அதேபோல் நான் இங்கு குறிப்பிடும்படியான அமைப்பு பெரும்பாலும் உங்களது வீடுகளில் இருக்கலாம்.
அதனால் உங்களுக்கும் கிட்னி பிரச்சனை வரக்கூடும் என்பது அதன் அர்த்தமல்ல. மீண்டும் ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்துகிறேன். அதாவது வாஸ்து என்பது ஒவ்வொருவருக்கும் டகைந ளவலடநக்கு ஏற்ப மாறுபடும். இடத்திற்கு இடம் மாறுபடும். அதனால் உங்களை பயமுறுத்தக்கூடிய நோக்கத்தில் கூறவில்லை. ஒருவேளை உங்களுக்கு தெரிந்த எவரேனும் இதுபோல பாதிப்புகளில் இருக்கும் பட்சத்தில் முடிந்தால் அவர்களுக்கு அந்த வாஸ்து தவறை சரிசெய்து நீண்ட ஆயுளுடன் வாழ வழி செய்யுங்கள்.
வீட்டின் உட்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் தவறான அமைப்புகள் :
1. தென்மேற்கு பகுதி மொத்த இடத்திற்கு தாழ்வாக இருப்பது.
2. தென்மேற்கு பகுதியில் கிணறு, போர், சம்பு, செப்டிக் டேங், கோபுர கேஸ், ஊர் பொதுவான தண்ணீர் தொட்டி அமைப்பு, பாதாள சாக்கடை, நீரோடைகள், ஆறு, குளம், குட்டை, கழிவுநீர் வாய்க்கால் இதுபோன்ற அமைப்பு தவறு.
3. தென்மேற்கு ரோடு வீட்டை விட தாழ்வாக இருப்பது.
4. தென்மேற்கு தெரு ரோடு குத்து.
5. வடமேற்கு வடக்கு தெருகுத்து ரோடு குத்து.
6. தென் கிழக்கு கிழக்கு தெரு ரோடு குத்து.
7. தென்மேற்கு பகுதியை வெட்டி ஒட்டி கட்டிய அமைப்பு.
8. தென்மேற்கு பகுதியில் படியை தவறாக அமைத்தல்.
9. பாய்லர் அடுப்பு, ஓவன் போன்றவைகளை தென்மேற்கு பகுதியில் வைப்பது.
10. தென்மேற்கு பகுதியை மூன்றாம் நபருக்கு வாடகைக்கு விடுதல்.
இதுபோல இன்னும் பல தவறான அமைப்புகள் உண்டு. அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் மட்டுமே இதுபோல கண்ணுக்கு தெரியாத தவறுகளை கண்டறிய முடியும்.
எனவே நீங்கள் உங்களது உடலை எப்படி பாதுகாக்கிறீர்களோ அதுபோல வீட்டு அமைப்பையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதே சாலச் சிறந்தது.