வாஸ்து, ஜோதிடம், எண்கணித நிபுணரின் வீட்டு அமைப்புகள்
எனைப்போல் வாஸ்து நிபுணரும், ஜோதிடம்,எண்கணித நிபுணரும் வாசிக்கக்கூடிய வீட்டின் அமைப்புகளை பற்றி இன்று பார்ப்போம்.
ஒருவர் ஜோதிடக் கலையிலேயோ அல்லது எண் கணித்திலேயோ அல்லது வாஸ்துவிலேயோ மிக பிரபலமடைந்தவர்கள் எத்தகைய அமைப்புடைய வீடுகளில் வசிக்கிறார்கள். அல்லது இவர்கள் பிரபலமடைய எத்தகைய வீடுகளில் இருந்தால் பிரபலமடைய முடியும் என்று பார்ப்போம்.
வீட்டு அமைப்புகள்
பொதுவாகவே ஆன்மிகம், ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து , இதுபோன்ற துறைகளில் உள்ளவர்களின் வீடுகள் தென்மேற்கு பார்த்தவாறே உள்ளது. அதாவது தவறு என்று சொல்வதைக் காட்டிலும் அந்த தவறுதான் அவர்களை அந்த துறை சார்ந்த கலைகளைக் கற்றுக்கொள்ள தூண்டியிருக்கக் கூடும்.
ஒரு வீட்டின் உள் அமைப்புகள் வெளி அமைப்புகளுக்கு ஏற்ப அவர்களுடைய எண்ணம் மாறுபட்டு அல்லது தூண்டப்பட்டு இதுபோன்ற கலைகளைக் கற்றுக்கொள்ள துவங்கி இருப்பார்கள்.
சில அன்பர்கள் கூறுகிறார்கள். நான் இதற்கு முன்பு இருந்த வீட்டில் தான் ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டேன். ஆனால் இப்போது இந்த வீட்டிற்கு வந்த பிறகு என்னால் கற்க முடியவில்லை என்கின்றனர். அதேபோல் சிலர், நான் இப்பொழுது உள்ள வீட்டிற்கு வந்த பிறகுதான் இதுபோல கலைகள் மீது எனக்கு ஆர்வம் வந்தது என்றும் சில அன்பர்கள் கூறுகின்றனர்.
வாஸ்துபடி அமைப்புகள்
- வடக்கு, கிழக்கு திறந்த அமை உள்ள வீடு.
- தென்மேற்கு பூஜையறை , குளியலறை, சேமிப்பு அறை, உள் மூலையின் படி அமைப்பு, வரவேற்பு அறை, சமையல் அறை அமைப்பு (படுக்கை அறை தவிர்த்து )
- வடமேற்கு வடக்கு தெரு பார்வை அமைப்பு
- தென் கிழக்கு தெற்கு தெரு பார்வை அமைப்பு
- தென் மேற்கு தாழ்வான பகுதிகள் அல்லது தெரு பார்வை உள்ள இடங்கள்
இது போல அமைப்புகள் உள்ள வீட்டில் வசிக்கும் என்னை போன்றவர்கள் பிரபலமடைவதில் எந்த ஆச்சரியமும் இல்லை .