வாஸ்து சாஸ்திரமும் – திருமணத் தடையும்!

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911

 

வாஸ்து சாஸ்திரமும் திருமணத் தடையும்!

    நாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஏற்ப தான் நமது வாழ்க்கைத் தரம் அமையும். கணவனுக்குஇ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்போம். இது இருவருக்குமே பொருந்தும். அப்படிப்பட்ட அதிஷ்டகரமான வாழ்க்கை சில பேருக்கு எட்டாக்கணியாகவே உள்ளது. சில பேருக்கு கிடைக்காமல் கூட போய்விடுகிறது. வாஸ்து சாஸ்திரத்திற்கும் திருமணத்தடைக்கும் தொடர்பு உண்டா என்பதைப் பற்றியும்  அதற்கான காரணங்கள் பற்றியும் பார்ப்போம்.

   இன்று நமது ஊரில் திருமணத்தடை மற்றும் திருமணம் தள்ளி போக பல காரணங்களை நமது தாய் தந்தையினரும் சமுதாயத்தினரும் கூறுவது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அவை 

1. ஜாதகம் பொருத்தம் சரிவரவில்லை என்றே கூறி நாள் கடத்துவது.

2. எதிர்பார்த்த மாதிரி பெண்ணிற்கு மாப்பிள்ளை அமையாது. ஆணுக்கு பெண் அமையாது.

3. வேலையிலேயே அதிக கவனத்தை செலுத்தி திருமணத்தை தள்ளி வைப்பது.

4. வெளியூர் வெளிநாடு சென்று அங்கேயே தங்கி விடுவது.

   இதுபோல இன்னும் ஏராளமான காரணங்களை எல்லாம் சொல்லி வயது வந்த பெண்ணையும் சரி ஆணையும் சரி சரியான வயதில் திருமணம் செய்து வைக்காமல் ஒரு சில வீட்டில் முதிர்க்கன்னியாகவும் முதிர் காளையாகவும் இருப்பதைப் பார்க்க முடியும். 

   வாஸ்து சாஸ்திரத்தின்படி திருமணத்திற்கும் ஒரு சில தவறான அமைப்புகள் உள்ள வீடே காரணம். அது நாம் குடியிருக்கும் வீட்டின் கிழக்கு பகுதியும் தென்மேற்கு பகுதியுமே ஆகும. 

   இந்த கிழக்கு பகுதி இந்திரனின் திசை என்போம். ஒரு வீட்டில் இந்திரனின் திசையை அதாவது கிழக்கு திசையை மூடிவிட்டால் திருமணத்தடை என்பது உறுதி. இந்த இந்திரனின் திசையை சரி செய்யும் பட்சத்தில் அந்த இடத்திற்கு இந்திரியம் ஏற்பட்டு உடனடியாக திருமணம் என்ற விஷயம் நடைபெறும்.

 அதுபோல தென்மேற்கு ஒருசில தவறான அமைப்புகள் இருக்கும் பட்சத்திலும் திருமணத்தடை ஏற்படும். அந்த அமைப்புகளாவன. 

1. பூஜை அறை

2. வரவேற்பரை

3. சமையலறை

4. கழிவறை

5. உள்மூலைப்படி அமைப்பு

6. போர்டிகோ

7. மெயின் வாசல்

8. கிணறு போர்

   இன்னும் பல அமைப்புகள் உண்டு. இவைகளை சரி செய்துகொள்ளும் பட்சத்தில் உடனடியாக திருமணம் என்பது நடைபெறும். 

   திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்போம். அப்படிப்பட்ட திருமணத்தை வாஸ்து சாஸ்திரம் நன்கு அறிந்த வாஸ்து நிபுணரின் உதவியால் மட்டுமே முடியும்.