வாஸ்து நிபுணர்
P.ஆ.கிருஷ்ண ராஜன்
8220544911
வாஸ்து சாஸ்திரமும் – கழிவுநீர்தொட்டி (செப்டிக்டேங்) அமைப்பும் :-
நாம் வசிக்கும் வீட்டில் கழிவுநீர்தொட்டி என்கிற செப்டிக்டேங்க் எங்கு வரவேண்டும்? எங்கு வரக்கூடாது? அதனால் என்ன நன்மை என்ன தீமை என்பதைப் பற்றி பார்ப்போம்.
செப்டிக்டேங் வரக்கூடிய பகுதி :
நமது மொத்த இடத்திற்கு வடமேற்கு பகுதியான வாயு மூலையில் மட்டுமே செப்டிக்டேங் வர வேண்டும். இந்த பகுதியிலும் வீட்டிற்குள் அதாவது கட்டிடத்திற்குள் வரக்கூடாது. கட்டிடத்திற்கு வெளிப்புற பகுதியில் மட்டுமே வர வேண்டும். அதுவும் காம்பவுண்ட்க்கு வெளிபகுதியில் வந்தால் மிக மிக சிறப்பை தரும்.
செப்டிக்டேங் வரக்கூடாத பகுதிகள் :
1. வடகிழக்கு
2. கிழக்கு
3. தென் கிழக்கு
4. தெற்கு
5. தென்மேற்கு
6. மேற்கு
7. வடக்கு பகுதி
இந்த பகுதிகளில் வீட்டிற்குள்ளும் சரி வீட்டிற்கு வெளிப்புற பகுதியிலும் சரி செப்டிக்டேங் அமைப்பு வருவது தவறு.
கிராமப்புறங்களிலும் சரி நகர்புறங்களிலும் சரி வடமேற்கு பகுதிக்கு அடுத்தாற்போல செப்டிக்டேங் அமைப்பது தென்கிழக்கு பகுதியில்தான். இந்த தென்கிழக்கு பகுதியில் செப்டிக்டேங் அமைப்பதால் தீமைகள் அதிகம் உண்டாகும். அதாவது தென்கிழக்கு பகுதியில் செப்டிக்டேங் உள்ள வீடுகளை நோய்வாய்ப்பட்டவர்கள் அதிகப்படியான பேர் வசிக்கின்றனர்.
இதுபோல இடங்களில் வசிப்பவர்களின் உடல் நிலையில் வெள்ளை அணுக்கள் குறைவது சர்க்கரை வியாதி வருவது பெண்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வருவது அதிகப்படியான வியாதியான கேன்சர் என்கிற புற்றுநோய் போன்ற நோய்கள் தென்கிழக்கு பகுதியில் செப்டிக்டேங் இருக்கும் வீடுகளில் வசிப்பதால் ஏற்படுகின்றன.
வடகிழக்கு பகுதி தென்மேற்கு பகுதிகளில் செப்டிக்டேங் வரும் பட்சத்தில் அந்த இடத்தில் குடியிருப்பவரின் மனநிலை மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் உடல் நிலையிலும் பெரிய பாதிப்புக்குள்ளாகின்றனர்.
நாம் கட்டக்கூடிய கட்டிடத்திற்கு இடத்தை மிச்சம் செய்வதாக நினைத்து தவறான இடத்தில் செப்டிக்டேங் அமைத்து கஷ்டப்படுவதை தவிர்த்து சரியான வாஸ்து நிபுணரின் ஆலோசனை கேட்டு சரியான இடத்தில் செப்டிக்டேங் அமைத்துக் கொள்வது நன்மையை தரும்.