வாஸ்து சாஸ்திரப்படி மேற்குப் பகுதி
வாஸ்து சாஸ்திரத்தில் வீடு எப்படி இருக்க வேண்டும் எனும் பகுதியில் இன்று மேற்குப் பகுதியைப் பற்றி அறிவோம்.
மேற்குப் பகுதி
மேற்குப் பகுதி வருணனின் திசை என்பார்கள். இந்த மேற்குப் பகுதியில்தான் ஒரு மனிதனின் தொழில், வியாபாரம், குடும்பம், வருமானம், கல்வி, ஞானம், ஆரோக்கியம், குடும்ப உறவுகள், வெளி உலகத் தொடர்புகள் மற்றும் மனநலம் ஆகியவைகள் இந்த மேற்குப் பகுதிக்கு உரியது.
மேற்குப்பகுதி சரியாக அமைந்துவிட்டால் அந்த வீட்டில் குடியிருக்கும் மனிதனின் வாழ்வு, சுகவாழ்வாகவே அமையும். ஒரு வேளை தவறாக அமைந்துவிட்டா வாழ்க்கை சக்கரம் இல்லாத வண்டிபோலாகிவிடும்.
மேற்குப் பகுதி காம்பவுண்ட் சுவர்
மேற்குப்பகுதி மொத்த வீட்டிற்கும் உயரமான பகுதியாக அமைவது சிறப்பு. இங்குள்ள காம்பவுண்ட் நம்முடையதாக இருக்கலாம் அல்லது பொது சுவராகவும் இருக்கலாம். வீட்டிற்கும், காம்பவுண்டிற்கும் இடைவெளி என்பது, கிழக்கு காம்பவுண்ட் இடைவெளியை விட மேற்குக் காம்பவுண்டிற்குள் உள்ள இடைவெளி குறைவாக இருக்க வேண்டும்.
மேற்குப் பகுதி மற்றும் வடமேற்குப் பகுதியில்
வரக்கூடியவைகள் :
குளியலறை , கழிவுநீர்த்தொட்டி , கார்பார்க்கிங், சமையலறை, படிக்கும் அறை, பூஜை அறை , உறவினர்கள் தாங்கும் அறை போன்ற நல்ல அமைப்புகள் இருப்பது சிறப்பு.
வரக்கூடாதவைகள் :
மேற்கு, வடமேற்கு பகுதியில் மாஸ்டர் பெட்ரூம் வரக்கூடாது. உள் மூலைப்படி அமைப்பு வரக்கூடாது. தண்ணீர்த் தொட்டி , கிணறு போன்ற அமைப்புகளும் வருவது தவறு.
அன்பு நண்பர்களே , இந்த மேற்கு , வடமேற்கு பகுதியே மனிதனின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. இந்தப் பகுதியை சரியாகக் கையாண்டு நீண்ட புகழ், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.