வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகள்
நான் கடந்த 10 வருடங்களில் வாஸ்துவில் அனுபவப்பட்ட விஷயங்களையும் கண்டு உணர்ந்த விஷயங்களையும் அடிப்படை விதிகளாய்வடிவமைத்து உள்ளேன். இவை எல்லோருக்கும் எளிதில் பயன்படுத்தும் விதமாக அமைத்துள்ளோம்.
- நீங்கள் வாங்க கூடிய இடமோ, காலி மனையையோ அல்லது வீடோ எதுவானாலும் சதுரமாகவும் செவ்வகமாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
- காலி மனையை பொறுத்தவரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு சற்று தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
- வீட்டின் உள் அமைப்பை பொறுத்தவரை வடகிழக்கு வரவேற்பறை யாகவும் தென்கிழக்கு சமையலறையாகவும் தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம் ஆகவும் வடமேற்கு கழிவறை ஆகும் அமைத்துக் கொள்ள வேண்டும்.பூஜையறையை பொறுத்தவரை தென்கிழக்கு, தெற்கு நடுபகுதி, வடமேற்கு,மேற்கு நடுப்பகுதி இந்த பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாம்.
- கழிவறையை பொருத்தவரை வீட்டின் மேற்கு நடுப்பகுதி மற்றும் வீட்டின் வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ளலாம்.
- கழிவறைகுழி வீட்டின் மொத்த அமைப்பில் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும்.
- மாடிப்படியை பொறுத்தவரை வீட்டின் உட்பகுதியில் தெற்கு நடுப்பகுதி , மேற்கு நடுப்பகுதியில் மட்டும் வரவேண்டும்.வெளிப்புறத்தில் தென்கிழக்கு ,தென்மேற்கு வடமேற்கு ஆகிய மூன்று பகுதியிலும் திறந்தவெளி முறையில் வரவேண்டும் .
- வீட்டிற்கு நான்கு புறமும் காம்பவுண்டு மிக மிக அவசியம். தெற்குப் பகுதியும் மேற்கு பகுதியும் குறைவான இடைவெளியில் காம்பவுண்ட் வரவேண்டும்.
- வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் நிறைய இடை வெளியில் காம்பவுண்ட் வரவேண்டும்.
- போர், கிணறு, தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி போன்றவைகள் வடகிழக்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும்.
- தரைக்கு மேல் தண்ணீர் தொட்டி அமைப்பு என்பது வீட்டின் மொத்த அமைப்பின் தென்மேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும்,
- கார் செட் அமைப்பானது வீட்டின் தென் கிழக்குப் பகுதியிலும், வட மேற்குப் பகுதியிலும் எந்த ஒரு மூலையிலும் மூடாமல் வரவேண்டும்.
- போர்டிகோ பொருத்தவரை வீட்டின் நான்கு பகுதிகளிலும் அமைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மூலையும் வெட்டாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.போர்டிகோவீட்டின் மேற்கூரை அளவில் சமதளமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
- வீட்டின் உட்பகுதியில் தரை தளமும் வீட்டின் மேற்கூரையின் தளமும் இரண்டும் சமமாக இருக்க வேண்டும்.
- அனைத்து வாசல்களும், ஜன்னல்களும் உச்சப்பகுதியில் மட்டுமே வர வேண்டும்.
- தெருக்குத்து ,தெருபார்வை உச்ச பகுதியில் வருவது சிறப்பு.
நான் கூறிய இந்த அடிப்படை விதிகளை மீறி கட்டிடம் அமைக்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகளையே உறுதியாக ஏற்படுத்தும் . 82205-44911